Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு?
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக் கூடாதவைகள் மற்றும் சாப்பிட வேண்டியவை !!
சர்க்கரை வியாதி இன்று இந்தியாவில் அதிகம் பாதிக்கக் கூடிய நோயாகும். உலகளவில் இந்தியாவில்தான் சர்க்கரைவியாதி அதிகமாக உள்ளது. குறிப்பாக 40 வயதினருக்கு சர்க்கரை நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதன் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார மையங்கள் தெரிவித்துள்ளன.
சர்க்கரை வியாதிக்கு காரணம் ;
உடற்பயிற்சி இல்லாதது, நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாதது, நிறைய மசாலா உணவுகள் மற்றும் குளிர்பானங்கள், உடல்பருமன் ஆகியவைகள்தான் சர்க்கரை வியாதி உருவாகக் காரணங்கள்.
அதோடு குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியில் திடீர் மாற்றம் எற்பட்டு, அது சுரக்காமல் போகும்போது, குளுகோசின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. விளைவு சர்க்கரை வியாதி.

சர்க்கரை வியாதி வந்தால் குணப்படுத்தமுடியாது. கட்டுப்படுத்திவைக்கலாம். அதோடு நிற்காமல் இந்த வியாதி, இதய நோய் மற்றும் ரத்தக் கொதிப்பை உண்டாக்குகிறது என பல ஆய்வுகள் கூறுகின்றன. அது தொடர்பான நிறைய ஆய்வுக் கட்டுரைகளை நாம் தொடர்ந்து போல்ஸ் ஸ்கையில் பார்த்து வருகிறோம். இப்போது சர்க்கரை வியாதி வந்தவர்கள் எது சாப்பிடலாம் எது சாப்பிடக் கூடாது என பார்க்கலாம்.
சாப்பிடக் கூடாத உணவுகள் ;
காய்கறிகளில் பீட்ரூட், திராட்சை, சர்க்கரை, ஜாம், பிஸ்கட், சாக்லெட், கார்பனேட்டட் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், கேக், முந்திரி, க்ரீம் வகை உணவுகள், கொழுப்பு நிறைந்த மசாலா உணவுகள், ப்ரிஸ்ர்வெட்டிவ் கலந்த உணவுகள் ஆகியய்வைகள் கெடுதல் தரும்.
சாப்பிடக் கூடிய உணவுகள் :
தே நீர் :
சர்க்கரை இல்லாத க்ரீன் டீ, மூலிகை தே நீர், சீமை சாமந்தி தே நீர், ஆகியவை நல்லது. சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும்.
சர்க்கரைக்கு பதிலாக தேன், பேரிச்சம் பழம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். கொழுப்பு நீக்கப்பட்ட பால், சீஸ் ஆகியவ்ற்றை எடுத்துக் கொள்ளலாம்.
முழு தானியங்கள் :
கோதுமை, ராகி சர்க்கரை வியாதிகாரர்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். பழங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
காய்கறிகள் :
வெள்ளரிக்காய், லெட்யூஸ், முள்ளங்கி, தக்காளி, கேரட், பூண்டு, வெங்காயம் பீன்ஸ், முட்டை கோஸ், தினமும் தவறாமல் கீரை வகைகள் ஆகியவ்ற்றை சாப்பிட வேண்டும். நிறைய கலர்கலரான காய்களை சாப்பிடும்போது, உங்கள் கணையம் நன்ராகல் செயல்புரியும். இன்சுலின் சுரப்பை தூண்டும்.
நார்சத்து உணவுகள் ;
நார்சத்து கொண்ட உணவுவகைகள் சிறந்த முறையில் குளுகோஸை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். அதிக நார்சத்து உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு எப்போதும் குளுகோஸின் அளவு கட்டுக்குள் இருக்கும் என ஆய்வுகள் நிருபிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இவற்றில் அதிக அளவு குரோமியம் உள்ளது. இவை ரத்தத்தில் குளுகோஸின் அளவை குறைக்கச் செய்யும்.
பொட்டாசியம் நிறைந்த உணவுகள் :
பொட்டாசியம் அதிகம் நிறைந்த நட்ஸ், வாழைப்பழம், கிவி, ஆப்பிள் சைடர் வினிகர், பட்டாணி அகியவற்றை சாப்பிடுங்கள். அதுபோல், பார்லி அரிசி, ஓட்ஸ் , பாதாம் , எல்லா வித பீன்ஸ் வகைகள் ஆகியவை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது செய்யும்.வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் உள்ளதால் சர்க்கரைவியாதி உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என சொல்வார்கள்.
ஆனால் வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் நார்சத்து ஆகியவை உள்ளன. இவை ரத்தத்தில் சோடியம் அளவை குறைக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் உண்டாகாமல் வாழைபழம் தடுக்கும் என்பது நல்ல விஷயம்.
ஏறக்குறைய எல்லா பழங்களிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. வாழைப்பழத்திலும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்தான் உள்ளது. ஆகவே நீங்கள் வாழைப்பழத்தை தாரளமாக சாப்பிடலாம்
வியாதி இல்லாமல் வாழ்வதே ஒரு வரம். இன்று வரும் இன்பத்திற்காக வாழ் நாள் முழுவதும் துன்பத்தை தேடிக் கொள்ளாதீர்கள். எதையும் அளவோடு சாப்பிட்டால் வளமோடு வாழலாம். தீயவைகளிடமிருந்து தள்ளியிருங்கள். இந்த மந்திரத்தை மனதில் வைத்து கடைபிடித்தால் நோயில்லாமல் நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




