Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
உங்கள் பிபி-யைக் வேகமா குறைக்கணுமா? இந்த ஈஸியான சுவாசப் பயிற்சிகளை டெய்லி பண்ணுங்க போதும்...!
இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த ஓட்டம் உங்கள் தமனிகளின் சுவர்களில் செலுத்தும் அழுத்தத்தின் அளவாகும். உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இரண்டுமே ஆபத்தான ஆரோக்கிய நிலைகளாகும். இதில் ஏற்படும் மாற்றங்கள் நம் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும்.
உங்கள் இரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருந்தால், அது உங்கள் இதயம், சிறுநீரகம், மூளை மற்றும் கண்களை சேதப்படுத்தும். உங்கள் இரத்த அழுத்த அளவை தொடர்ந்து கண்காணித்து, உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். இல்லையெனில் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு பயனுள்ள மற்றும் எளிய வழி தினசரி சுவாச பயிற்சிகளை பயிற்சி செய்வதாகும்.

சுவாசப் பயிற்சியின் தாக்கம்
இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன: சிஸ்டாலிக் (SBP) மற்றும் டயஸ்டாலிக் (DBP). SBP ஒரு நபரின் இதயத் துடிப்பின் அழுத்தத்தை அளவிடுகிறது, மேலும் DBP இதயம் ஓய்வெடுக்கும்போது அழுத்தத்தை அளவிடுகிறது.
2023 ஸ்கோப்பிங் மதிப்பாய்வின்படி, 2 நிமிட மெதுவான மற்றும் ஆழமான சுவாசம் மட்டுமே உயர் இரத்த அழுத்த நபர்களின் SBP ஐ 8.6 mm Hg மற்றும் DBP 4.9 mm Hg குறைக்கும். உங்கள் பிபி அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த 3 சுவாசப் பயிற்சிகளை தினமும் முயற்சிக்க வேண்டும்.
உதரவிதான சுவாசப்பயிற்சி
உதரவிதானம் அல்லது வயிறு சுவாசப் பயிற்சியை எப்படி செய்ய வேண்டுமெனில்,
* வசதியாக உட்கார்ந்து, ஒரு கையை உங்கள் மார்பிலும் மற்றொன்றை உங்கள் வயிற்றிலும் வைக்கவும்.
* இப்போது உங்கள் மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும், வாயை மூடி வைக்கவும். நீங்கள் சுவாசிக்கும்போது, உங்கள் வயிற்றை காற்றில் நிரப்ப அனுமதிக்கவும், ஆனால் உங்கள் மார்பை அசையாமல் வைக்கவும்.
* இப்போது வாய் வழியாக மெதுவாக மூச்சை வெளியே விடவும். உள்ளிழுக்கும் காலத்தை விட மூச்சை வெளியேற்றும் காலத்தை அதிகமாக்க முயற்சிக்கவும்.
சம விருத்தி பிராணாயாமம்
சம விருத்தி பிராணயாமா சுவாசப் பயிற்சியை எப்படி செய்ய வேண்டுமெனில்,
* வசதியாக உட்கார்ந்து மெதுவாக வாய் வழியாக மூச்சை வெளியே விடவும். இப்போது வாயை மூடிக்கொண்டு நான்கு எண்ணும் வரை மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும். மீண்டும் மெதுவாக நான்கு எண்ணும் வரை உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* அடுத்து, அதே வேகத்தில் நான்கு எண்ணும் வரை வாய் வழியாக மூச்சை வெளியேற்றவும்.
4-7-8 சுவாசப்பயிற்சி
இந்த தாள சுவாசப் பயிற்சியை எப்படி செய்ய வேண்டுமெனில்,
* வசதியாக உட்கார்ந்து மெதுவாக உங்கள் வாய் வழியாக சுவாசிக்கவும். இப்போது, உங்கள் வாயை மூடிக்கொண்டு 4 விநாடிகள் மெதுவாக சுவாசிக்கவும்.
* அடுத்து, உங்கள் மூச்சை 7 விநாடிகள் கட்டுப்படுத்தி வைத்திருங்கள். அதன்பின் 8 விநாடிகள் வாய் வழியாக மூச்சை வெளியேற்றவும். பிறகு இதனை மீண்டும் செய்யவும்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும் பிற வழிகள்
உயர் இரத்த அழுத்தத்திற்கான எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம். தினசரி சுவாசப் பயிற்சியைத் தவிர, உங்கள் BP அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளன.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அறிக்கையின் படி, உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது இதில் மிகவும் முக்கியமானது. சரியான எடையை அடைவது மற்றும் அதனை பராமரிப்பது, சத்தான உணவை உண்ணுதல் மற்றும் உப்பின் அளவைக் குறைப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, மற்றும் மதுவை கட்டுப்படுத்துவது போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
