Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
எச்சரிக்கை! இந்த 4 உணவுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வெச்சு சாப்பிடாதீங்க.. 24 மணிநேரத்துல உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..
தற்போது அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு அத்தியாவசியமான பொருளாக ஃப்ரிட்ஜ் உள்ளது. ஃப்ரிட்ஜ்ஜானது உணவுகளை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாகவும், பிரஷ்ஷாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் சமையலறைல் உள்ள பெரும்பாலான உணவுப் பொருட்கள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களாகவே உள்ளன.
அப்படிப்பட்ட சத்தான உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென, அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்போம். ஆனால் ஃப்ரிட்ஜ்ஜில் ஒருசில உணவுப் பொருட்களை வைக்கக்கூடாது. நிறைய பேருக்கு எந்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது என்பது தெரிவதில்லை.

இதுக்குறித்து மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் தளத்தில், ஆயுர்வேத மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளரான டாக்டர் டிம்பிள் ஜங்தா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நம்மை அறியாமல் ஃப்ரிட்ஜ்ஜில் நாம் வைக்கும் எந்த உணவுகள் விஷமாக மாறி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது என்பது குறித்து கூறியுள்ளார்.
முக்கியமாக இந்த உணவுகள் அனைத்துமே ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டது. இப்போது இன்ஸ்டா வீடியோவில் டாக்டர் டிம்பிள் கூறியுள்ள அந்த உணவுகள் என்னவென்பதைக் காண்போம். அதைப் படித்து, இதுவரை நீங்கள் இந்த உணவுகளை வைத்து வந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.
1. பூண்டு
முதலில் பூண்டுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள். அதுவும் தோலுரித்து விற்கப்படும் பூண்டுகளை எப்போதும் வாங்கக்கூடாது மற்றும் அவற்றை ஃப்ரிட்ஜ்ஜிலும் வைக்கக்கூடாது. ஏனெனில் தோலுரித்த பூண்டுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அது விரைவில் பூசணம் பிடித்துவிடும்.
பூசணம் பிடித்த பூண்டுகள் புற்றுநோயை வரவழைத்துவிடும். எனவே எப்போதும் நற்பதமான மற்றும் தோலுடனான பூண்டுகளை மட்டுமே வாங்குங்கள். மேலும் அவற்றை சமையலில் பயன்படுத்துவதற்கு முன்பு தோலுரித்து உடனே பயன்படுத்துங்கள். முக்கியமாக பூண்டுகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள்.
2. வெங்காயம்
ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாத மற்றொரு பொருள் வெங்காயம். நிறைய பேரின் வீட்டில் சின்ன வெங்காயத்தை ஓய்வு நேரங்களில் தோலுரித்து, அவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பார்கள். இன்னும் சிலர் பாதி வெங்காயத்தை பயன்படுத்திவிட்டு, மீதியை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பார்கள். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறு.
ஏனெனில் இப்படி தோலுரித்த மற்றும் வெட்டிய வெங்காயத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அதில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுவதோடு, விரைவில் பூசணம் பிடித்துவிடும். மேலும் வெட்டிய வெங்காயமானது சுற்றுச்சூழல் சுற்றிக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுற்றுச்சூழலை சுத்தமாக்கும். எனவே இந்த தவறையும் ஒருபோதும் செய்யாதீர்கள்.
3. இஞ்சி
ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாத மற்றொரு பொருள் இஞ்சி. இந்த இஞ்சி ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. முக்கியமாக இது ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டது. சளி பிடித்திருக்கும் போது இஞ்சியை கொண்டு டீ தயாரித்து குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
ஆனால் அந்த இஞ்சியை வெட்டிய பின் ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது விரைவில் பூசணம் பிடித்துவிடும். இப்படி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பூசணம் பிடித்த இஞ்சியை சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
4. சாதம்
இந்த பட்டியலில் நான்காவதாக இடம் பெறும் உணவுப் பொருள் தான் சாதம். நிறைய பேரது வீட்டில் எஞ்சிய சாதத்தை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அப்படி சமைத்த சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால், அது அதிவேகமாக பூசணம் பிடித்துவிடும். ஒருவேளை ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதாக இருந்தால், 24 மணிநேரத்திற்கு மேல் வைக்காதீர்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் டாக்டர் டிம்பிள் தெரிவித்திருந்தார். எனவே நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், இந்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications