மூட்டுகளில் கிழிசல் ஏற்பட்டுருச்சா? அதை சரி செய்ய இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம் தெரியுமா?

சிலருக்கு கால்களை நீட்டும் போது க்ரீச் க்ரீச் என்ற சத்தம் கேட்கும். இது உங்கள் முழங்கால் குருத்தெலும்பு மோசமடைந்து உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த முழங்கால் கிழிசலை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் பின்னாளில் கீல்வாத பிரச்சினையை சந்திக்க நேரிடலாம்.

நமது மூட்டுகளில் உராய்வு ஏற்படாமல் தடுக்க குஷன் போன்ற அமைப்பில் "குருத்தெலும்பு" காணப்படுகிறது. நமக்கு வயதாகும் போது அல்லது சில சமயங்களில் நாம் பருமனாக இருக்கும் போது இந்த குருத்தெலும்புகள் மோமடைகின்றன. மூட்டுகளுக்கு இடையே உள்ள குருத்தெலும்பு மோசமடைவதால் அவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக வரத் தொடங்கும். இதனால் அதிக உராய்வு ஏற்படுகிறது.

best foods for cartilage growth in tamil

ஆனால் அதே சமயத்தில் முழங்கால் குருத்தெலும்பை இயற்கையாக மீண்டும் உருவாக்குவதில் சில உணவுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் மூட்டு ஆரோக்கியத்தில் எந்த மாதிரியான உணவுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

குருத்தெலும்பு ஏன் தேய்கிறது

குருத்தெலும்பு என்பது உங்கள் மூட்டுகளில் உள்ள 'குஷனிங்' முறையாகும். இது உங்களுக்கு தடையற்ற மூட்டு இயக்கத்தை தர உதவுகிறது. மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக குருத்தெலும்புகளின் வயது குறையலாம் . எனவே உங்கள் உடல் எடைக் கூட குருத்தெலும்புகள் தேய முக்கியமான காரணமாக அமையலாம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமானவர்களை விட சீக்கிரமே முழங்கால் குருத்தெலும்பு தேய்ந்து போய் விடுகிறது. முழங்கால் வீங்கி நாள்பட்ட வீக்கத்தைக் அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இதனால் அவர்கள் கீல்வாதம் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

குருத்தெலும்பை மீண்டும் உருவாக்க உதவும் சூப்பர் ஃபுட் உணவுகள்

பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகள் உங்கள் குருத்தெலும்பை மீண்டும் உருவாக்குவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ப்ரோக்கோலி, பிரஸ்ஸல் முளைகள் மற்றும் அடர் பச்சை காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வரலாம். இதில் மூட்டுகளை வலுப்படுத்தும் வைட்டமின் கே சத்து உள்ளது. கீரைகள், வோக்கோசு போன்ற நம் உடலில் ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராடும் காய்கறிகளை எடுத்துக் கொண்டு வரலாம்.

இந்த இலை காய்கறிகள் உடலில் ஆக்ஸினேற்றத்தை அதிகரிப்பதோடு நம் உடலில் மக்னீசியம் மற்றும் கால்சியம் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த அடர் பச்சை மற்றும் இலை காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகள் குருத்தெலும்பு சிதைவை குறைக்கிறது. எனவே அடர் பச்சையிலை காய்கறிகளை எடுத்துக் கொண்டு வந்தால் மூட்டு வலியில் இருந்து தப்பிக்க முடியும்.

எண்ணெய் மீன்கள்

மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நாள்பட்ட அழற்சி மற்றும் முழங்கால் விறைப்பைக் கட்டுப்படுத்துகிறது. நமது எலும்புகளில் கால்சியத்தை உறிஞ்ச வைட்டமின் டி தேவை.

எனவே மீன்களில் வைட்டமின் டி அதிகளவு காணப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், குருத்தெலும்புகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களை எடுத்துக் கொண்டு வரலாம்.

அவகேடா

அவகேடா பழம் ஒரு சிறந்த ஆரோக்கியமான உணவாகும். இந்த வெண்ணெய் பழத்தில் மோனோசாச்சுரேட்டட் ஆக்ஸிஜனேற்ற எண்ணெய்கள் நிரம்பியுள்ளன. இது ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராடி வீக்கத்தை தடுக்கிறது. இந்த அவகேடா பழத்தில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், இணைப்புத் திசு மற்றும் குருத்தெலும்புகளை சரி செய்யும் பீட்டா-சிட்டோஸ்டெரால் போன்றவை உள்ளது.

இதில் வைட்டமின் ஈ யும் நிறைந்து காணப்படுகிறது. இது உங்கள் எடை தாங்கும் திறனை அதிகரிக்கிறது. மேலும் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசியும் மூட்டுகளின் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த பழுப்பு அரிசியில் ஹைலூரோனிக் அமிலம் என்பது உள்ளது. இது மூட்டு பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. இதிலுள்ள ஹைலூரோனிக் அமிலம் மூட்டுகளில் உராய்வு ஏற்படுவதை தடுக்கிறது. இது ஒரு இயற்கையான லூப்ரிகண்டாக செயல்படுகிறது.

முழங்கால் சேதத்தில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த ஹைலூரோனிக் அமிலம் மூட்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஊசிகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. குருத்தெலும்பை மீண்டும் உருவாக்க பழுப்பு அரிசி சிறந்த ஒன்றாக இருக்கும்.

மஞ்சள்

மஞ்சள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் மசாலாப் பொருளாகும். மஞ்சளை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். மஞ்சளில் உள்ள குர்குமின் முழங்கால் வலியை குறைக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முழங்கால் குருத்தெலும்பை அமைதிப்படுத்த உதவுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion