Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பூண்டு, கிராம்பை இந்த மாதிரி சாப்பிட்டா, படுக்கையில் இரண்டு மடங்கு சிறப்பா செயல்பட முடியுமாம்..
Garlic Clove Mixture In Tamil: நம் வீட்டு சமையலறையில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ பண்புகளைக் கொண்ட பொருட்கள் பல பொருட்கள் உள்ளன. அதில் பூண்டு மற்றும் கிராம்பு உடலில் பல மாயங்களை ஏற்படுத்தும். அதுவும் இவ்விரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, அதன் விளைவாக பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
அதில் கிராம்பில் உள்ள உட்பொருட்கள் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. கிராம்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஜிங்க் மற்றும் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின்களான சி, பி6, பி13, ஏ, ஈ, டி, கே, தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

அதேப் போல் பூண்டு பற்களை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள மருத்துவ பண்புகள் சுவாச தொற்றுகள், மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் பி, உடலில் உள்ள நச்சுக்களை நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இவ்வளவு சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகளைக் கொண்ட பூண்டு மற்றும் கிராம்பை ஒன்றாக எடுப்பதன் மூலம், பலவித பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இப்போது ஒவ்வொரு பிரச்சனைக்கும் பூண்டு மற்றும் கிராம்பை பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
குடல் புழுக்கள் மற்றும் தொற்றுக்களை நீக்க..
வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே வயிற்றில் உள்ள புழுக்களை திறம்பட வெளியேற்ற வேண்டுமானால், இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்க வேண்டும். பின் அதை ஒரு பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது பட்டைத் தூள் மற்றும் தேனை மூழ்கும் வரை ஊற்றி, அதை மூடி வைத்து 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
குழந்தைகளாக இருந்தால், இந்த கலவையை காலையில் ஒரு சிறிய ஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால், காலை மற்றும் இரவு தூங்கும் முன் ஒரு பெரிய ஸ்பூனும் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக இந்த கலவை குடல் புழுக்களை அழிப்பதோடு, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
அந்தரங்க தொற்றுகளை சரிசெய்ய...
நிறைய பேர் அந்தரங்க பகுதியில் அடிக்கடி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர். நீங்களும் அப்படி அவதிப்படுகிறீர்களானால், 4 பூண்டு பற்களை எடுத்து தோல் நீக்கிவிட்டு, அதைத் தட்டி, ஒரு டம்ளர் நீரில் போட்டு, அத்துடன் சில கிராம்புகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து கலந்து, அதை காலை மற்றும் மாலை வேளையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இந்த கலவையை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ளக்கூடாது.
பல் வலிக்கு..
பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு பூண்டு கிராம்பு கலவை நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு இவ்விரண்டின் எண்ணெய்கள் அல்லது அவற்றை அரைத்து பயன்படுத்தலாம். அதுவும் பல் வலி கடுமையாக இருக்கும் போது, கிராம்பு மற்றும் பூண்டு பொடியை ஒன்றாக எடுத்து, அவற்றை டீ-பேக்கில் போட்டு கட்டி, பல் மற்றும் ஈறு வலிக்கும் போது அவ்விடத்தில் இந்த பேக்கை வைத்து கடிக்கும் போது, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பாலியல் பிரச்சனைகளைப் போக்க...
முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையைக் கொண்ட ஆண்களின் பாலியல் வாழ்க்கை மோசமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, படுக்கையில் இரண்டு மடங்கு சிறப்பாக செயல்பட வேண்டுமானால், பூண்டு மற்றும் கிராம்பு பெரிதும் உதவி புரியும். அதற்கு பூண்டு மற்றும் கிராம்பை தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வாருங்கள். இதனால் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
சிறுநீரகங்களை சுத்தம் செய்ய...
நமது உடலில் சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய பணியை செய்கின்றன. அப்படிப்பட்ட அந்த சிறுநீரகங்களில் அழுக்குகள் அதிகம் சேர வாய்ப்புள்ளன. இந்த அழுக்குகளை வெளியேற்ற கிராம்பு, பூண்டு பெரிதும் உதவி புரியும். அதற்கு கிராம்பு மற்றும் பூண்டு பற்களைத் தட்டி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து பருக வேண்டும்.
சுவாச கோளாறுகளுக்கு...
சுவாச பிரச்சனைகளை சந்திப்பவர்கள், அதிலிருந்து விடுபட பூண்டு மற்றும் கிராம்பை உட்கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும். அதற்கு 40 பூண்டு பற்களை எடுத்து, 100 கிராம்புகள் மற்றும் 1/2 லிட்டர் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு பற்களை தோலுரித்து, 100 கிராம்பை எடுத்து அதை 1/2 லிட்டர் தேனில் போட்டு, 10 நாட்கள் ஊற வைத்து, பின் அதை தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications