Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
தினமும் இரவு தூங்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
Garlic Benefits In Tamil: நமது சமையலறையில் இருக்கும் மற்றும் தினசரி உணவில் சேர்த்து வரக்கூடிய ஒரு மருத்துவ குணம் வாய்ந்த ஒரு உணவுப் பொருள் தான் பூண்டு. இப்படி பூண்டு ஒரு மருத்துவ பொருளாக இருக்க காரணம், அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான்.
மேலும் இந்த அல்லிசின் தான் அதன் மணத்திற்கும், சுவைக்கும் முக்கிய காரணம். இந்த பூண்டை தினசரி உணவில் சேர்த்து வந்தாலே பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதிலும் இந்த பூண்டை ஒருவர் தினமும் பச்சையாக சாப்பிட்டால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

முக்கிமாக தினமும் இரவு தூங்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், அது உடலில் பல மாயங்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
பூண்டில் உள்ள சத்துக்கள்
பூண்டில் கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இது தவிர இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 போன்றவையும் வளமான அளவில் உள்ளன.
ஆயுர்வேதத்தில் பூண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பாக்டீரியாக்களை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது தினமும் இரவு தூங்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
தூக்க பிரச்சனைகளைப் போக்கும்
நீங்கள் தினமும் இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் ஒரு பல் பூண்டு மற்றும் ஒரு டம்ளர் சுடுநீரைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள அல்லிசின், மனதை ரிலாக்ஸடைய உதவுகின்றன. இதில் உள்ள மக்னீசியம், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவி புரிந்து, இரவு நேரத்தில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வழிவகை செய்கிறது.
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலமானது உடலில் பல்வேறு நோய்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதலை அதிகரிக்கும். ஆனால் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக்குத் தேவையான வைட்டமின்களை வழங்கி பலப்படுத்துகிறது. எனவே நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் பூண்டு சாப்பிட்டு வாருங்கள்.
சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும்
தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால், அது சளி, காய்ச்சல் தொல்லைகளில் இருந்து விடுவிக்கும். அதுவும் பூண்டில் காணப்படும் வைட்டமின்கள் சளி தீவிரமாவதைக் குறைக்க உதவுகிறது. ஏற்கனவே சளி பிடித்திருக்கும் போது, பூண்டு சாப்பிட்டால், அது விரைவில் சளியில் இருந்து விடுவிக்கும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
நீங்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் தினமும் பூண்டு சாப்பிடுங்கள். ஆய்வு ஒன்றில் பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள அத்தியாவசிய பண்புகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. அதுவும் பூண்டை இரவு தூங்கும் முன் உட்கொண்டால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள், தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்த, உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரிகிறது. அதுவும் பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை இயல்பாக வைத்துக் கொள்ள உதவி புரிந்து, பசி அதிகம் எடுப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications