Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
வெயிலால் உடம்பு சூடு அதிகமாயிடுச்சா? அப்ப இந்த சர்பத்தை ஒரு டம்ளர் குடிங்க...
Bael sherbet Benefits: கோடைக்காலத்தில் கடைகளில் பலவிதமான ஜூஸ்கள் மற்றும் சர்பத்கள் விற்கப்படுவதுண்டு. மேலும் அதிக வெயிலின் தாக்கத்தைத் தணிக்க அனைவரும் அவற்றையே அடிக்கடி வாங்கி குடிப்போம். குறிப்பாக பெரும்பாலானோர் சர்பத்தை அதிகம் விரும்பி குடிப்பார்கள். சர்பத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் நிறைய பேருக்கு தெரியாத, ஆனால் கடைகளில் விற்கப்பட்டு வரும் ஒரு வகையான சர்பத் தான் வில்வப் பழ சர்பத்.
ஆம், வில்வப் பழத்தைக் கொண்டும் சர்பத் தயாரிக்கலாம். இந்த வில்வப் பழம் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டது. குறிப்பாக இது கோடைக்காலத்தில் சந்திக்கும் பல உடல்நல பிரச்சனைகளைப் போக்கக்கூடியது. வில்வப் பழத்தை நாம் பலவாறு சாப்பிடலாம். ஆனால் அதைக் கொண்டு சர்பத் தயாரித்தால், விரும்பி குடிக்கலாம்.

வில்ல பழத்தின் சத்துக்கள்
வில்வ பழம் ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதும் கூட. இது நல்ல மணத்துடன், இனிப்புச் சுவையைக் கொண்டிருக்கும். வில்வ பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பல்வேறு கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இது உடலைக் குளர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் சுவாச பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இப்போது கோடைக்காலத்தில் வில்வப்பழ சர்பத்தைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
உடல் சூடு குறையும்
வெயில் காலத்தில் ஒரு டம்ளர் குளிர்ச்சியான வில்வப் பழ சர்பத்தைக் குடித்தால், அது உடல் சூட்டை உடனடியாக குறைக்க உதவும். முக்கியமாக இது ஐஸ்க்ரீம்மிற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இந்த சர்பத் மிகவும் சுவையானதாக இருக்கும்.
சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும்
வில்வ பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆயுர்வேதத்தில் சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆய்வு ஒன்றிலும், வில்வ பழத்தில் உள்ள பண்புகள் நுரையீரலைத் தாக்கும் கொடிய வைரஸ் தொற்றுக்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டதாக தெரிவிக்கிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
வில்வ பழ சர்பத் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. முக்கியமாக இந்த பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வில்வ பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகின்றன.
எனவே, இந்த கோடையில் வில்வ பழ சர்பத்தைக் குடித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
