Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
அடிக்கடி மார்பக மசாஜ் செய்வதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Breast Massage In Tamil: ஒரு பெண்ணுக்கு மார்பகங்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. எனவே அவ்வப்போது மார்பகங்களில் ஏற்படும் மாற்றத்தை நாம் கண்டு கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கவனிக்காமல் இருப்பது மார்பக புற்றுநோயை பெரிதுபடுத்த வாய்ப்பு உள்ளது.
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலயே கண்டறிவது அதை எளிதாக குணப்படுத்த முடியும். எனவே பெண்கள் அவ்வப்போது மார்பக சுய பரிசோதனை செய்வது அவசியம். இதன் மூலம் மார்பக புற்று நோயை நாம் ஆரம்பத்திலயே கண்டறிய முடியும்.

மார்பகத்தில் எதாவது கட்டி இருந்தால் அதைக் கண்டறிய மார்பக மசாஜ் உதவுகிறது. மேலும் மார்பக மசாஜ் செய்யும் போது ஆரோக்கியமான மார்பகத்தை பெற முடியும்.
மார்பக மசாஜ் என்றால் என்ன?
மார்பக மசாஜ் என்பது ஒரு ஆயுர்வேத முறையாகும். இதன் மூலம் நிணநீர் திரவத்தை அக்குள் மற்றும் மார்பக திசு வழியாக தள்ள உதவுகிறது. மார்பக மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். கர்ப்பிணிப் பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும், முலையழற்சி செய்யப்பட்ட பெண்களுக்கும் மார்பக மசாஜ் சிறந்த பலனை தருகிறது. மார்பக மசாஜ் செய்வதால் எந்த மாதிரியான நன்மைகளை பெறலாம் என்று பார்ப்போம்.
மார்பக மசாஜ் ஏன் முக்கியம்?
மார்பக மசாஜ் செய்வதன் மூலம் மார்பக புற்று நோயை முன்கூட்டியே கண்டறிய முடியும். நம் உடலில் உள்ள நிணநீர் மண்டலமானது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற நமது இயக்கத்தை நம்பியுள்ளது. நமது மார்பு மற்றும் அக்குளைச் சுற்றிலும் நிணநீர் திரவம் தேங்கி நிற்கும் போது பல பகுதிகள் உள்ளன. மார்பகத்தில் நிணநீர் திரவம் தேங்கும் போது வலி உண்டாகிறது. எனவே நீங்கள் மார்பக மசாஜ் மேற்கொள்ளும் போது இந்த பிரச்சினையை சரிசெய்ய முடியும். மார்பக மசாஜ் செய்வதன் மூலம் அதன் வடிவம், எதேனும் மாற்றங்கள் மற்றும் மார்பகத்தில் உள்ள கட்டிகள் போன்றவற்றை எளிதாக அறிய முடியும்.
மார்பக மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
மேம்படுத்தப்பட்ட தோற்றம்
மார்பகங்கள் தொங்குவதை சரி செய்ய மார்பக மசாஜ் உதவுகிறது. இதன் மூலம் மார்பக இறுக்கத்தை பெற முடியும். அழகான மார்பகங்களை இதன் மூலம் நீங்கள் பெறலாம். எப்போதும் மார்பகங்கள் இளமையாக இருக்க இது உதவுகிறது. மார்பக மசாஜ் மார்பகங்களின் தோற்றத்தையும், வடிவத்தையும் பராமரிக்க உதவுகிறது.
மார்பக வலியை போக்க முடியும்
மார்மப மசாஜ் செய்வதன் மூலம் மார்பக வலியை போக்க முடியும். மார்பக மசாஜ்யை மெதுவாக செய்வதன் மூலம் தசைகளை தளர்த்த முடியும். இதனால் மார்பகத்தில் உள்ள புண்கள் மற்றும் வலியை குணப்படுத்த முடியும். மார்பகத்தின் தசைநார்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தாங்கு முடியாத மார்பக வலியை குறைக்க மார்பக மசாஜ் உதவுகிறது.
மார்பக ஆரோக்கியம்
மார்பக மசாஜ் செய்வது உங்கள் மார்பகத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. திசு தசைநார்களில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மார்பகங்களில் உள்ள நச்சுத்தன்மை பல கொடிய நோய்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மார்பக மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மார்பகங்கள் இவை புதிய ஊட்டச்சத்தை பெற உதவுகிறது. இதன் மூலம் மார்பக புற்று நோயை தடுக்க முடியும். இதன் மூலம் மார்பகத்தில் உள்ள மாற்றங்கள் மற்றும் கட்டிகளை கண்டறிய முடியும்.
மார்பக மசாஜ் செய்ய எளிய டிப்ஸ்கள்:
மசகு எண்ணெயை பயன்படுத்துங்கள்
ஆலிவ் எண்ணெய் போன்ற மசகு எண்ணெயை மார்பகங்களுக்கு பயன்படுத்தி வரலாம். இது மார்பகங்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெயை கொண்டு உங்கள் மார்பகங்களை மென்மையாக மசாஜ் செய்யுங்கள். ஆயில் பயன்படுத்தும் அதை வெதுவெதுப்பாக சூடாக்கி கைகளில் தடவிக் கொண்டு பிறகு மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்.
வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள்
மார்பக மசாஜை வட்ட இயக்கத்தில் செய்ய வேண்டும். வெளிப்புறமாக வட்ட இயக்கத்தில் தொடங்கி அப்படியே மெது மெதுவாக மையத்தை நோக்கி செல்ல வேண்டும். இப்படி செய்யும் போது மார்பகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
மென்மையாக மசாஜ் செய்யுங்கள்
மார்பகப் பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்பதால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். மென்மையான மசாஜ் உங்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. வேகமான மசாஜ் அல்லது மிகவும் கடினமாக மசாஜ் செய்வது உங்களுக்கு மார்பகங்களில் காயங்களை உண்டாக்கலாம். எனவே மென்மையான முறையில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications