Latest Updates
-
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்த ஒரு இலையை நீரில் போட்டு கொதிக்க வெச்சு தினமும் குடிச்சா.. உடல் எடை மடமடன்னு குறையும்.. ட்ரை பண்ணி பாருங்க
Bay Leaf Water Benefits In Tamil: நம் வீட்டு சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் உள்ளன. அதில் தினசரி சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஒரு பொருள் தான் பிரியாணி இலை. நிறைய பேர் பிரியாணி இலையை வெறும் நறுமணத்திற்காக தான் சேர்க்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் பிரியாணி இலை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த இலையை சமையலில் சேர்ப்பதைத் தவிர, இதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா? ஏனெனில் இந்த இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 மட்டுமின்றி, மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவைகளும் அதிகமாக நிறைந்துள்ளன.

பாரம்பரிய மருத்துவத்திலும் இந்த பிரியாணி இலை பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
செரிமான பிரச்சனைகள் நீங்கும்
நீங்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இதனால் அந்த இலையில் உள்ள சத்துக்கள் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, உணவுகளை சிறியதாக உடைத்தெறிந்து, அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பிரியாணி இலையில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப்புண்ணை ஆற்றும். குடல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை குடிப்பது மிகவும் நல்லது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பிரியாணி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன. இதனால் இந்த பிரியாணி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுவும் தற்போது HMPV வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால், தினமும 1/2 டம்ளர் இந்த நீரை குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று, தொற்றுநோய்களின் அபாயம் குறையும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
பிரியாணி இலை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், இயற்கை வழியில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த நினைத்தால், காபி, டீ-க்கு பதிலாக, பிரியாணி இலை நீரை குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
இதய பிரச்சனைகள் தடுக்கப்படும்
பிரியாணி இலைகளில் உள்ள குறிப்பிட்ட கலவைகள், இதயத்தின் நுண் குழாய்களை வலுப்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் மேம்படுகிறது. முக்கியமாக பிரியாணி இலை நீரை குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய்களின் அபாயமும் குறையும்.
எடை இழப்பு
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதை சிரமப்படாமல் குறைக்க நினைத்தால், பிரியாணி இலை நீர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இந்த நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்க உதவுகின்றன. மேலும் பிரியாணி இலை நீரை குடித்து வருவதன் மூலம், உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீர் வெளியேறி, உடல் லேசாகவும், ஆற்றலுடனும் இருக்கும்.
மாதவிடாய் பிடிப்புகள் நீங்கும்
மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியை சந்திக்கும் பெண்களுக்கு பிரியாணி இலை நீர் ஒரு சிறந்த தீர்வளிக்கும். இதற்கு அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். இவை கருப்பை தசைகளை தளர்த்தி, வயிற்று பிடிப்புகள் மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது. அதோடு மாதவிடாய் கால உடல் சோர்வையும் போக்க உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்
பிரியாணி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால், அது உடலில் இருந்து அதிகப்படியான நீரையும், நச்சுக்களையும் வெளியேற்றும். இதனால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது தடுக்கப்படுவதோடு, சிறுநீரகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பிரியாணி இலை நீரை தயாரிப்பது எப்படி?
* பிரியாணி இலை நீரைத் தயாரிப்பதற்கு, ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 2-3 பிரியாணி இலைகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதை இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த நீரை ஒரு நாளைக்கு 1-2 முறை குடிக்கலாம்.
குறிப்பு: பிரியாணி இலை நீர் என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவாக குடிக்க வேண்டியது அவசியம். அளவுக்கு அதிகமாக குடித்தால், அது இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். மேலும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக மருந்து மாத்திரைகளை தினமும் எடுப்பவர்கள் இந்த நீரை குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். பிரியாணி இலை நீரின் முழு பலனைப் பெற நினைத்தால், நல்ல உயர்தரமான பிரியாணி இலையை பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











