ஆண்களே! உடலுறவில் உங்க வேகத்தையும் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க இத சாப்பிட்டா போதுமாம்!

Sexual Power In Tamil: பாலியல் ஆரோக்கியம் உங்கள் நெருக்கத்தையும் இன்பத்தையும் மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனரீதியாகவும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை இன்பமாக இருக்கும்போது, அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்.

இன்றைய நாளில் பல்வேறு காரணங்களால், தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக பாலியல் வாழ்க்கையில் ஆர்வம் குறையத் தொடங்கும்போது, தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கமும் குறையத் தொடங்கும். திருமணமான சில காலங்களில் உடலுறவில் சலிப்பு ஏற்படுவது பொதுவானது. ஆனால், உங்கள் உடலுறவை சலிப்பாக மாற்றாமல், நீங்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்.

Ayurvedic Foods That Increase Sexual Power In Tamil

இயற்கையாகவே உங்களுக்கு பாலியல் ஆசை குறையத் தொடங்கினால், உங்கள் பாலியல் ஆசையை அதிகரிக்க உதவும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் பாலியல் ஆசையை இருமடங்கு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் நீங்கள் இருக்க உதவும்.

உங்கள் வீரியம் மற்றும் லிபிடோவை அதிகரிப்பதாகக் கூறும் பல மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் இருந்தாலும், உடல்நலம் தொடர்பான பக்க விளைவுகள் இல்லாமல், இயற்கையான வழியில் செல்வது நல்லது. அந்த வகையில், உங்கள் கருவுறுதல் மற்றும் பாலுணர்வை அதிகரிக்க உதவும் பல ஆயுர்வேத உணவுகள் உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மாதுளை
மாதுளை பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அற்புதமான பழமாகும். இதை தொடர்ந்து உட்கொள்ளும் போது, உங்கள் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கும். கூடுதலாக, இது கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். மாதுளையில் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால், இரத்த தமனிகளைத் தளர்த்தி இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

ஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனை மேம்படுத்த மாதுளை உதவுகிறது. எனவே லேசான மற்றும் மிதமான விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள், மாதுளை பழம் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற அறிகுறிகளை எளிதாக்கும் திறன் உட்பட மாதுளை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

பேரீச்சம்பழம்
சூப்பர்ஃபுட்டான பேரீச்சம்பழம், ஆண்களின் கருவுறுதல் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நன்கு உதவுகிறது. தங்களின் பாலியல் ஆசையை அதிகரிக்க முயற்சிக்கும் ஆண்கள் பேரீச்சம்பழத்தை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். சில ஆராய்ச்சிகளின்படி, டேட்ஸ் சாப்பிடுவது, ஆண், பெண் இருவரின் பாலியல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நீங்கள் இதை சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் காணப்படும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் எஸ்ட்ராடியோல், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால், ஆண்களே! உங்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்தால், மறக்காமல் டேட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

பார்லி
பார்லி பிறப்புறுப்பு உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு கோதுமை உணவு உதவுகிறது என்பதை அறிந்து நீங்கள் அதிர்ச்சியடையலாம். நைட்ரிக் ஆக்சைடு மற்றும் அர்ஜினைன், இவை இரண்டும் ஆண்குறி விறைப்புத்தன்மையில் ஈடுபட்டுள்ளன மற்றும் ஆண்குறி செயலிழப்பைக் குணப்படுத்த உதவுகின்றன.

இந்த கலவைகள் பார்லியில் அதிகம் காணப்படுகின்றன. ஆண்களே! உங்களுக்கு விறைப்புதன்மை பிரச்சனை இருந்தால், பார்லியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பூண்டு
பூண்டு உங்களின் நல்ல வாய் வாசனைக்கும் உடலுறவுக்கும் ஒரு சாதகமான கலவை அல்ல. ஆனால் பல மனித மற்றும் விலங்கு ஆய்வுகள் பூண்டு கருவுறுதலை அதிகரிக்கலாம் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் பாலியல் செயல்திறனை மேம்படுத்தலாம் என்று கூறுகின்றன.

பயன்படுத்துவதற்கு முன், பூண்டை நறுக்கவும் அல்லது நசுக்க வேண்டும். சமைப்பதற்கு முன் குறைந்தது 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பல ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமான அல்லிசின் என்ற கலவை இதன் விளைவாக அதிகரிக்கிறது. ஆதலால், உங்கள் பாலியல் ஆசையை அதிகரிப்பதில் பூண்டு ஓர் முக்கிய உணவாக இருக்கிறது.

நட்ஸ்கள்
பிஸ்தா, ஹேசல்நட்ஸ், அக்ரூட் பருப்புகள், பாதாம், முந்திரி, வேர்க்கடலை உள்ளிட்ட நட்ஸ்களை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் பாலியல் ஆசை இருமடங்கு அதிகரிக்கலாம். நைட்ரிக் ஆக்சைடு அளவுகள் மற்றும் பிறப்புறுப்பு உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் ஆகியவற்றை உயர்த்துவதற்கு நிரூபிக்கப்பட்ட அமினோ அமிலம் எல்-அர்ஜினைன் நட்ஸில் ஏரளாமாக உள்ளன. எனவே, நட்ஸ்களை சாப்பிடும்போது உடலுறவுக்கான உடலின் இயல்பான தூண்டுதல் அதிகரிக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, May 11, 2023, 11:25 [IST]
Desktop Bottom Promotion