Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
Poonam Pandey: வெறும் 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்த சர்ச்சை நடிகை பூனம் பாண்டே!
Poonam Pandey Death: மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் காலமானார் என அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவரான நடிகை பூனம் பாண்டே, 2011 ஆம் ஆண்டு இந்த அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். சர்ச்சைக்குரிய நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை பூனம் பாண்டே இன்று காலை கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பூனம் பாண்டே 2020 ஆம் ஆண்டு தனது காதலர் சாம் பாம்பேயை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மாதத்திலேயே அவரது கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறி, போலீசில் புகாரளித்தார். இதனால் இவரது திருமண வாழ்க்கை முடிக்கு வந்தது. இந்நிலையில் திடீரென்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் காலை இவர் உயிரிழந்ததாக வெளிவந்த செய்தியால், பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக, பெண்களை அதிகம் தாக்கும் ஒரு புற்றுநோய் தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த புற்றுநோயால் இறக்கிறார்கள் மேலும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள். இதனாலேயே இந்திய அரசு இந்த புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க 9-14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதாக நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நிறைய பெண்கள் இறப்பதற்கு காரணம், அதன் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை பல பெண்களும் அறியாமல் இருப்பது தான். ஆரம்பத்திலேயே அதன் அறிகுறிகளை அறிந்து, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வந்தால், உயிரிழப்பை தடுக்கலாம். இப்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
அசாதாரண இரத்தப்போக்கு
மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சியை சந்திக்கும் பெண்கள் ஆரோக்கியமானவர்கள். ஆனால் பல பெண்கள் எப்போதாவது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது ஸ்பாட்டிங்கை சந்திப்பார்கள். எப்போது ஒழுங்கான மாதவிடாய் சுழற்சியை சந்திக்கும் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்களோ, அப்போது அதை சாதாரணமாக நினைக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
அசாதாரண வெளியேற்றம்
வெள்ளைப்படுவது என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் அந்த வெள்ளைப்படும் போது, அதன் நிறம் இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திலோ, துர்நாற்றத்துடனோ இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது கர்ப்பபை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அசாதாரண வெளியேற்றம் பிற காரணங்களாலும் ஏற்படலாம் என்றாலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளுள் இதுவும் ஒன்று என்பதை மறவாதீர்கள்.
வலிமிகுந்த உடலுறவு
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தீவிர நிலையில் இருக்கும் பெண்கள், உடலுறவு கொள்ளும் போது மிகுந்த வலியை சந்திக்க நேரிடும். உடலுறவின் போது ஏற்படும் வலி பல காரணங்களால் ஏற்படலாம். இருப்பினும், அந்த காரணங்களுள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இடுப்பு பகுதியில் வலி
மாதவிடாய் காலத்தில் இடுப்பு பகுதியில் வலியை சந்திப்பது என்பது பொதுவானது. ஆனால் மாதவிடாய் காலத்தில் மட்டுமின்றி, மற்ற காலங்களிலும் இடுப்பு பகுதியில் வலியை சந்தித்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் இந்த வலியானது கூர்மையாக இருப்பதோடு, அந்த வலி இடுப்பு பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கும் பரவும். எதுவாயிலும் கடுமையான வலியை சந்தித்தால், தாமதிக்காமல் மற்றும் யோசிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
குடலியக்கத்தில் மாற்றங்கள்
சில சமயங்களில் பெண்களின் குடலியக்கம் மற்றும் சிறுநீர் வெளியேற்றும் விதங்களும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதுவும் தொடர்ச்சியாக அடிக்கடி சிறுநீரைக் கழிக்க நேரிட்டாலோ அல்லது நீண்ட காலமாக தொடர்ந்து குடலியக்கத்தில் மாற்றங்களை சந்தித்தாலோ, அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிறுநீரகம், சிறுநீர்ப்பை அல்லது பெருங்குடல் புகுதிகளுக்கு பரவியிருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த அறிகுறியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
