Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...!
டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீர் மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் மாரிமுத்து - எது காரணமாக இருக்கும்?
Actor Marimuthu Death: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான எதிர்நீச்சல் என்னும் தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்து 'இந்தாம்மா ஏய்' என்ற ஒரு வசனத்தால் பலரது மனதைக் கவர்ந்தவர் தான் மாரிமுத்து. 56 வயதான இவர் இன்று காலை (செப்டம்பர் 8) திடீர் மாரடைப்பால் காலமானார்.
நடிகர் மாரிமுத்து ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பல பிரபலமான இயக்குநர்களிடம் பணியாற்றினார். அதோடு, இயக்குநர் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் நடிகராக நடித்தார். அப்படத்தில் தனது அசாத்திய நடிப்பால் பலரது மனதைக் கவர்ந்ததோடு, பல திரைப்பட வாய்ப்புக்களையும் பெற்றார். அதன் பின் பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் தனது எதார்த்த நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தார். இந்நிலையில் இன்று காலை ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்தார். விழுந்தவரை அங்குள்ளோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
முக்கியமாக, நடிகர் மாரிமுத்துவிற்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருந்ததாகவும், அதற்கு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார். சரி, ஒருவருக்கு எந்த காரணங்களால் திடீரென்று மாரடைப்பு ஏற்படக்கூடும் என்பதைக் காண்போம்.
கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?
கார்டியாக் அரெஸ்ட் என்னும் ஒரு வகையான மாரடைப்பானது ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை உள்ளோருக்கு ஏற்படலாம். ஏற்கனவே நோயுற்ற இதயம் செயலிழந்தால் கார்டியாக் அரெஸ்ட் என்னும் மாரடைப்பு ஏற்படுகின்றன. இந்த இதய செயலிழப்பு வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா அல்லது வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் போன்ற அசாதாரண இதய தாளத்தை ஏற்படுத்துகிறது.
சில கார்டியாக் அரெஸ்ட்டுகள் இதயத்தின் தாளம் மிகவும் குறைவாக இருந்தால் ஏற்படுகின்றன. இப்படி இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை பின்வருமாறு:
இதய திசுக்களின் வடு
இது மாரடைப்பு வருவதற்கு முந்தைய அல்லது வேறு சில காரணத்தின் விளைவாக இருக்கக்கூடும். ஏதேனும் ஒரு காரணத்தால் இதயத்தில் வடுக்கள் ஏற்பட்டால், அது உயிருக்கு ஆபத்தான வென்ட்ரிகுலர் அரித்மியாவை உருவாக்க வாய்ப்புள்ளது. அதுவும் ஏற்கனவே மாரடைப்பு வந்த முதல் 6 மாதங்களில் பெருந்தமனி தடிப்பு இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீர் மாரடைப்பு அல்லது கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.
சேதமடைந்த இதய தசை
ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவோ அல்லது இதய வால்வு நோய் அல்லது பிற காரணங்களால் இதய தசைகளில் சேதம் ஏற்படலாம். இதய தசைகளில் பிரச்சனை/நோய் இருந்தால், அது திடீர் மாரடைப்பு அல்லது கார்டியாக் அரெஸ்ட் அபாயத்தை அதிகரிக்கும்.
இதயத்திற்கான மருந்துகள்
இதய நோய்க்காக எடுக்கும் சில மருந்துகள் இதய தாளங்களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக திடீர் மாரடைப்பு அல்லது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம். மேலும் இரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் அளவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அரித்மியா மற்றும் கார்டியாக் அரெஸ்ட்/திடீர் மாரடைப்பை ஏற்படுத்தலாம்.
இரத்த நாளங்களில் அசாதாரணங்கள்
இந்த அரிதான நிகழ்வு கரோனரி தமனிகள் மற்றும் பெருநாடியில் ஏற்படுகின்றன. அதுவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது வெளியிடப்படும் அட்ரினலின், இரத்த நாளங்களில் அசாதாரணங்களை ஏற்படுத்தி, திடீர் மாரடைப்பு அல்லது கார்டியாக் அரெஸ்ட்டை ஏற்படத் தூண்டலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











