Latest Updates
-
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
வீட்டில் இருந்தபடியே 9 நிமிடத்தில் உங்களுக்கு மாரடைப்பு அபாயம் இருக்கா-ன்னு தெரிஞ்சுக்கலாம்.. தெரியுமா?
Heart Attack: கடந்த 10 ஆண்டுகளாக மாரடைப்பால் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். ஒருவருக்கு மாரடைப்பு எப்போதும் வரும் என்பதை சரியாக கூற முடியாது. இப்படி மாரடைப்பின் அபாயம் தெரியாமலேயே இருப்பதாலோ, என்னவோ நாள்தோறும் உலகெங்கிலும் ஏராளமானோர் மாரடைப்பால் இறந்து வருகிறார்கள்.
இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே ஒரு எளிய சோதனை மூலம் மாரடைப்பின் அபாயத்தில் உள்ளீர்களா என்பதை கண்டறியலாம் தெரியுமா? ஆம், ProDoc என்னும் ஒரு புதுமையான AI சோதனை கருவியானது. நோயாளிகளின் கொலஸ்ட்ரால் அளவையும், இதயத்தின் வயதையும் சரியாக படிப்பதோடு, உடல் நிறை குறியீட்டு எண்ணையும் மதிப்பிடுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, 40 முதல் 74 வயதிற்குட்பட்ட ஸ்டேடின்கள் அல்லது இரத்த அழுத்த மாத்திரைகளை எடுக்காதவர்கள் இந்த சோதனை கருவியை இங்கிலாந்தில் இலவசமாக ஆர்டர் செய்யலாம். முக்கியமாக இந்த கருவியானது 9 நிமிடங்களுக்குள் முடிவை தெரியப்படுத்தும். ஒருவேளை மாரடைப்பின் அபாயம் இருந்தால், முன்கூட்டியே சிகிச்சையை மேற்கொண்டு, அதன் அபாயத்தைக் குறைக்கலாம்.
புள்ளிவிவரங்களின் படி, 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இறப்புகளில் சுமார் 32 சதவீத இறப்புக்கு இதய நோய்களே முக்கிய காரணமாக இருந்துள்ளன. இது ஒவ்வொரு நொடிக்கும் ஒரு மரணம் அல்லது ஒரு நாளைக்கு 56,000 பேர் மரணத்திற்கு சமம். அதில் 85 சதவீத இறப்புக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தான் காரணமாக இருந்துள்ளன.
பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 75 வயதிற்குள் சுமார் 39,000 பேர் இதய நோயால் இறந்துள்ளனர். இதைப் பார்க்கும் போது மாரடைப்பு எவ்வளவு கொடியது என்பது அனைவருக்கும் தற்போது புரிந்திருக்கும்.
இப்படிப்பட்ட மாரடைப்பு மற்றும் இதய நோய்களால் மரணம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாரடைப்பின் அபாயத்தை கண்டறியும் இந்த புதிய ProDoc கிட்டை இங்கிலாந்தின் NHS அல்லது உள்ளூர் மருந்தகங்கள் மூலம் ஆர்டர் செய்தால் கிடைக்கும் என்று தி சன் தெரிவித்துள்ளது.
இதய நோய்க்கான முக்கியமான அறிகுறிகள் என்னென்ன?
பெரும்பாலானோருக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தால் எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாக காட்டப்படுவதில்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே உடல் பருமன், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள், ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள் போன்றோர் பின்வரும் அறிகுறிகளை சந்திக்கிறீர்களா என்பதை கவனிக்க வேண்டும். அவை:
நெஞ்சு வலி மற்றும் அசௌகரியம்
நெஞ்சு பகுதியில் மிகுதியான வலியையும், மிகுந்த அசௌகரியத்தையும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் இதயத்தில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
கையில் பரவும் வலி
மாரடைப்பில் மற்றொரு முக்கியமான மற்றும் கவனிக்க வேண்டிய அறிகுறி, உடலின் இடது பக்க பகுதியில் மிகுந்த வலியை சந்திப்பது. அதுவும் இந்த வலியானது இடது நெஞ்சு பகுதியில் இருந்து அப்படியே பரவி கைக்கு, தோள்பட்டைக்கு என்றெல்லாம் செல்லும்.
அஜீரண கோளாறு மற்றும் குமட்டல்
மாரடைப்பின் போது நிறைய பேர் குமட்டல் உணர்வையும், அஜீரண கோளாறையும் அதிகம் சந்திக்கிறார்கள். சில சமயங்களில சிலருக்கு வாந்தி கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தலைச்சுற்றல்
உங்களின் இரத்த அழுத்தம் திடீரென்று அதிகரித்து குறைகிறதா? அப்படியானால் இரத்தத்தை அழுத்த தேவையான ஆற்றல் இதயத்தில் இல்லை என்று அர்த்தம். இப்படி இதயத்தால் சரியாக செயல்படாமல் போகும் போது, தலைச்சுற்றலை சந்திக்க நேரிடும்.
மிகுதியான வியர்வை
வியர்ப்பது பொதுவானது தான். ஆனால் நல்ல குளிர்ச்சியான காலநிலையிலும் ஒருவருக்கு மிகுதியான வியர்வை வெளியேறினால், அது மாரடைப்பின் அறிகுறியாகும். அதுவும் இந்த அறிகுறியுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளும் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
உடல் சோர்வு
படிக்கட்டுகளில் ஏறிய பின் அல்லது ஏதாவது வேலை செய்த பின் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்து பாருங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, மிகுந்த உடல் சோர்வு அல்லது விவரிக்க முடியாத பலவீனம் போன்றவை நீண்ட நாட்களாக இருந்தால், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications