Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
5000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் பெண்களுக்கான 4 வகையான ட்ரெஞ்ச் கோட்கள்!
குளிர்காலம் வந்துவிட்டது! உங்கள் அலமாரியில் உள்ள ஆடைகளை மாற்றியமைக்க முடிவு செய்து விட்டீர்களா? இன்று, தமிழ் போல்ட்ஸ்கையில், சமீபத்திய ட்ரெண்டான குளிர்கால ஆடைகளைப் பற்றி நாம் பேச போகிறோம். அதிகமாக விற்பனையாக கூடிய அத்தகைய ஆடைகளை கூடிய விரைவில் நீங்கள் வாங்க வேண்டும்.
குளிர் காலம் தொடர்பாக ஏற்கனவே பல கட்டுரைகள் வந்து விட்டதே, இன்னமும் என்ன இருக்கிறது என நீங்கள் நினைப்பது எங்களுக்கு புரிகிறது. என்ன செய்வது? பெண்களுக்கான ஃபேஷன் என்பது சீக்கிரமே மாறும், சீக்கிரமே புத்துயிர் பெறும். அதனால் சில அருமையான தோற்றங்களைப் பற்றி நாம் பார்க்க போகிறோம். அவைகளை நீங்கள் வாங்கவும் செய்யலாம். கண்டிப்பாக இந்த வார இறுதி வீணாக போவதில்லை. போய் கொஞ்சம் ஷாப்பிங் செய்யுங்கள்.
ஃபேஷன் உலகத்தை கலக்கி கொண்டிருக்கும் ட்ரெஞ்ச் கோட் எனப்படும் நீளமான கோட்களின் நான்கு டிசைன்கள் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். இந்த பருவ காலத்தில் அதன் விற்பனை தான் ஓஹோவென இருக்கும். இது குளிர் காலத்திற்கு பிரத்யேகமானது. நம் வாசகர்களுக்கு நாங்கள் ஒருபோதும் ஏமாற்றத்தை அளிப்பதில்லை. அதனால் தான் நம் தளத்தில் ஃபேஷன் ட்ரெண்ட்ஸ் பக்கத்தையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். சரி அந்த நான்கு குளிர் கால ட்ரெஞ்ச் கோட் பற்றிப் பார்க்கலாமா?
1. இலகுவான ட்ரெஞ்ச் கோட்

பெண்களே, நீங்கள் கல்லூரிக்கு அணிந்து செல்வதற்கான மிக சிறந்த உடையாகும் இது. நீங்கள் வசிக்கும் இடத்தில் குளிர் காற்று மிக தீவிரமாக இல்லையென்றால், நீங்கள் கண்டிப்பாக இந்த வகை கோட்டை தேர்ந்தெடுக்கலாம். கல்லூரி, ஊர் சுற்றுதல் போன்றவைகளுக்கு இது சரியான தேர்வாகும்.
2. ராணுவ ட்ரெஞ்ச் கோட்
ராணுவ ட்ரெஞ்ச் கோட் பல்திறன் கொண்டதாகும். இதனை எங்கு வேண்டுமானாலும் அணிந்து கொண்டு செல்லலாம். இருப்பினும், இதனை அணிந்து செல்ல மிகவும் சிறந்த இடமாக கருதப்படுவது அலுவலகம். ஆம், அலுவலகம் செல்ல அல்லது சந்திப்பிற்கு செல்ல இது சரியான தேர்வாக இருக்கும்.
3. காஷுவல் ட்ரெஞ்ச் கோட்
காஷுவல் ட்ரெஞ்ச் கோட்களை சுலபமாக எடுத்துச் செல்லலாம். அதனுடன் சேர்த்து அது சொகுசையும் அளிக்கிறது. இது கிட்டத்தட்ட வாட்டர்ஃபால் கார்டிகன் வகை கோட் போன்றது தான். வீட்டில் நடக்கும் பார்ட்டிகள், வெளியே ஊர் சுற்ற, சாலை பயணம் அல்லது சும்மா வீட்டில் இருக்கும் போது கூட இதனை பயன்படுத்தலாம்.
4. ஃபாக்ஸ் ஃபர் ட்ரெஞ்ச் கோட்
லெதர் மற்றும் ஃபாக்ஸ் ட்ரெஞ்ச் கோட் ஃபேஷனுடன் கூடிய கம்பீரமான தோற்றத்தை அளிக்கும். இதனை பெரும்பாலும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்லுங்கள். குளிர் கால பார்ட்டிக்கு இது மிகவும் சிறந்ததாகும். ஃபாக்ஸ் ஃபர் காலர் உங்கள் தோற்றத்தை இன்னமும் மேம்படுத்தும்.
இவைகள் தான் குளிர் காலத்திற்கான நான்கு வகையான ட்ரெஞ்ச் கோட்கள். உங்களிடம் ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், கீழேயுள்ள பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.



Click it and Unblock the Notifications




