சூட்டைக் கிளப்பும் 2018 ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் காலெண்டரைப் பாருங்களேன்!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த 2018 ஆம் ஆண்டிற்கான கிங் ஃபிஷன் காலெண்டர் வெளிவந்துவிட்டது. இந்த வருடம் கிங் ஃபிஷர் காலெண்டரில் பல கவர்ச்சிகரமான இளம் மாடல்கள், அழகிய ஸ்விம்சூட்டில் சூட்டைக் கிளப்பினர். இந்த குளிர்காலத்தில் இவர்களது லுக்ஸ் ஒவ்வொன்றும் அதிர வைத்தது.

இந்த வருட கிங் ஃபிஷர் காலெண்டரின் தீம் மற்றும் இடம் குரோசியா. மாடல்கள், இடம் என இரண்டுமே மிகவும் அழகாக இருந்தது. உங்களுக்கு இந்த வருட கிங் ஃபிஷர் காலெண்டரில் இடம் பெற்ற மாடல்கள் மற்றும் அவர்களது தோற்றத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நிச்சயம் ஆவலாக இருக்கும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை 2018 ஆம் ஆண்டின் கிங் ஃபிஷர் காலெண்டரில் இடம் பெற்ற மாடல்களின் போட்டோக்களும், அவர்களைப் பற்றியும் கீழே கொடுத்துள்ளது. வாருங்கள் பார்ப்போம்....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜனவரி

ஜனவரி

ஜனவரி மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் மாடல் பிரியங்கா மூட்லி இடம் பெற்றுள்ளார். இந்த இளம் மாடல் மிகவும் லோ நெக்லைன் கொண்ட, மஞ்சள், வெள்ளை மற்றும் நீல நிறங்கள் கலந்த பாடிசூட் அணிந்திருந்தார்.

மாடலான பிரியங்கா மூட்லி பல்வேறு பிரபல டிசைனர்களான மனீஷ் மல்ஹொத்ரா, அனாமிகா கன்னா மற்றும் ரெபேகா தீவான் போன்றோருக்காக பல ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் நடந்துள்ளார்.

பிப்ரவரி

பிப்ரவரி

சூப்பர் மாடலான இஷிகா ஷர்மா உலகளாவிய புகழ் பெற்ற அழகு சாதன பொருட்கள், இணையதளங்கள், பத்திரிக்கைகள் போன்றவற்றிற்காக வேலை செய்துள்ளார். இத்தகையவர் இந்த வருடம் பிப்ரவரி மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் இடம் பெற்றுள்ளார். அதுவும் பிகினி அணிந்து பாறையின் மீது நின்று போஸ் கொடுத்திருந்தார்.

மார்ச்

மார்ச்

பிரியங்கா மூட்லியைப் போன்றே பெயரைக் கொண்ட பிரியங்கா கருணாகரன், ஏற்கனவே விளம்பர படங்கள் முதல் சின்னத்திரை சீரியல்கள் வரை நடித்துள்ளார். இத்தகையவர் இந்த வருடம் மார்ச் மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் பிரியங்கா கருணாகரன் இடம் பெற்றுள்ளார். அதுவும் பிங்க் நிற கிராப்டு பாடிசூட் அணிந்து, படு ஹாட்டாக படுத்தவாறு போஸ் கொடுத்திருந்தார்.

ஏப்ரல்

ஏப்ரல்

இந்திய மாடலான மிடாலி உலகளவில் நடைபெறும் ஃபேஷன் வீக்குகளில் கலந்து கொள்பவர். மேலும் மிகவும் பிரபலமான பத்திரிக்கைகளிலும் இடம் பெற்றவர். இவர் ஏப்ரல் மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் வெள்ளை, பச்சை, மஞ்சள் நிற செக்ஸியான ஸ்விம்சூட் அணிந்து, கிளாஸ் ஹீல்ஸ் மற்றும் வெள்ளை நிற ஹேர் பேண்ட் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

மே

மே

பிப்ரவரி மாதத்தில் இடம் பெற்ற மாடல் இஷிகா ஷர்மா, மீண்டும் மே மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் செக்ஸியான தோற்றத்தில் இடம் பெற்றார். அதிலும் வெள்ளை மற்றும் நீல நிற கோடுகள் போடப்பட்ட கிராப்டு பேக், க்ரோ-நெக் மற்றும் ஹிப்ஸ்டர் பாட்டம் கொண்ட பிகினியை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

ஜூன்

ஜூன்

பிரியங்கா மூட்லியும் மீண்டும் கிங் ஃபிஷர் காலெண்டரில் இரண்டாவது முறையாக ஜூன் மாதத்தில் இடம் பிடித்தார். அதுவும் இவர் நீல நிற பிகினி அணிந்து, செக்ஸியாக கடற்கரையில் கண்ணாடி அணிந்து படுத்தவாறு போஸ் கொடுத்திருந்த போட்டோ, ஜூன் மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் இடம் பெற்றது.

ஜூலை

ஜூலை

மாடல் மிடாலி ரானோரேயும் 2018 ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் காலெண்டரில் இரண்டாவது முறையாக இடம் பெற்றார். அதுவும் வெள்ளை நிற பாடிசூட் அணிந்து, நீரில் பாதி மூழ்கியவாறு போஸ் கொடுத்திருந்தார். மிடாலி கொடுத்த இந்த போஸ், உண்மையிலேயே கிங் ஃபிஷர் காலெண்டரில் இடம் பெற்றதிலேயே வித்தியாசமானது எனலாம்.

ஆகஸ்டு

ஆகஸ்டு

இது கிங்க் ஃபிஷர் காலெண்டரின் ஆகஸ்டு மாதத்தில் பிரியங்கா மூட்லி மூன்றாவது முறையாக காட்சியளிப்பதாகும். இந்த முறையில் பிரியங்கா மஞ்சள் நிற கிராப்டு வெயிஸ்ட்லைன் மற்றும் டீப் நெக்லைன் கொண்ட பாடிசூட் அணிந்து போஸ் கொடுத்திருந்தார். அதிலும் நீரில் இருந்து வெளியே வருவது போன்று கொடுத்த இந்த போஸ் அற்புதமாக இருந்தது.

செப்டம்பர்

செப்டம்பர்

கிங் ஃபிஷர் காலெண்டரில் மிடாலி ரானோரே செப்டம்பர் மாதத்திலும் இடம் பெற்றார். இந்த முறையில் மெட்டாலிக் கருப்பு மற்றும் கோல்டன் கோடுகள் போடப்பட்ட பிகினி அணிந்து, செக்ஸியாக போஸ் கொடுத்தார்.

அக்டோபர்

அக்டோபர்

இஷிகா தான் மிகவும் கவர்ச்சியானவர் என்பதை அக்டோபர் மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் நியான் நிற பீச் உடையில் நிரூபித்திருந்தார். இந்த பிகினி பலவண்ணங்களைக் கொண்டிருந்தது. அதில் சிவப்பு, மஞ்சள், ஊதா போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இஷிகா கால்களில் பிரிண்ட்டட் ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

நவம்பர்

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிரியங்கா மூட்லி இடம் பெற்றுள்ளார். இந்த நவம்பர் மாத கிங் ஃபிஷர் காலெண்டரில் பிரியங்கா வெள்ளை, பழுப்பு, நீல நிறங்கள் கலந்த பிகினி செட் அணிந்திருந்தார். இதோடு மேட்ச்சான ஸ்னீக்கர்ஸ் கூட அணிந்திருந்தார். இதனால் இவரது தோற்றம் சிறப்பாக காணப்பட்டது.

டிசம்பர்

டிசம்பர்

பிரியங்கா கருணாகரன் இரண்டாவது முறையாக 2018 ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் காலெண்டரின் டிசம்பர் மாதத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த மாதத்திற்கு இவர் ஓபன் பேக் மற்றும் ஹால்டர் நெக் கொண்ட சிவப்பு நிற பாடிசூட் அணிந்து, கால்களில் எதுவும் போடாமல் படுத்தவாறு போஸ் கொடுத்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion ஃபேஷன்
English summary

HOTNESS OVERLOAD: Kingfisher Calendar 2018 Decoded

Explore the looks of the fiery beauties from Kingfisher Calender 2018. Have a look.
Story first published: Monday, January 8, 2018, 17:42 [IST]