Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
35 வயதை எட்டிய நடிகை காஜல் அகர்வாலின் சில கவர்ச்சிகரமான தோற்றங்கள்!
காஜல் அகர்வால் இன்று தனது 35 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை. என்ன தான் 35 வயதை எட்டினாலும், இன்னும் கவர்ச்சி குறையாமல் அழகாக சிக்கென்று இருக்கிறார்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டிலும் நடித்துள்ளார். காஜல் அகர்வால் இன்று தனது 35 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை. என்ன தான் 35 வயதை எட்டினாலும், இன்னும் கவர்ச்சி குறையாமல் அழகாக சிக்கென்று இருக்கிறார்.

காஜல் அகர்வாலுக்கு அனைத்து உடைகளுமே அம்சமாக இருக்கும். புடவையாகட்டும், மார்டர் உடைகளாகட்டும். அனைத்துமே இவருக்கு பொருத்தமாக இருக்கும். பெரும்பாலும் காஜல் கவர்ச்சிகரமான உடையை அதிகம் அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளமாட்டார். இருப்பினும் ஒருசில விருது விழாக்களில் இவர் மிகவும் கிளாமரான உடையை அணிந்து வந்திருக்கிறார்.
காஜல் அகர்வாலின் பிறந்த நாளான இன்று, இதுவரை நடந்த சிவப்பு கம்பள விருது நிகழ்ச்சிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்த காஜல் அகர்வாலின் சில தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதில் காஜலின் எந்த தோற்றம் பிடித்துள்ளது என்பதை சொல்லுங்கள்.

2012 ஜீ சினி விருது விழா
2012 ஆம் ஆண்டு நடந்த ஜீ சினி விருது விழாவிற்கு காஜல் அகர்வால் டிசைனர் ஜேம்ஸ் பெர்ரீரா வடிவமைத்த வெள்ளை நிற புடவை டிசைன் கொண்ட கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு காஜல் சிம்பிளான மேக்கப் மற்றும் ப்ரீ ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்திருந்தார்.

2015 தென்னிந்தி பிலிம்பேர் விருது விழா
2015 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவின் போது காஜல் அகர்வால் டிசைனர் சூர்யா வடிவமைத்த க்ரீம் நிற ஹால்டர் நெக் கொண்ட உடை அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது ஒரு பேக்லெஸ் கவுன். அதோடு முன்புறம் டீப் லோ நெக் கொண்டதும் கூட. இந்த உடைக்கு காஜல் நேர்உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேலும் கழுத்தில் ரூபி மரகதம் பதித்த சில்வர் ஸ்டெப் நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார். காஜல் இந்த உடைக்கு பொருத்தமாக உதடுகளுக்கு மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு காஜல் போட்டு, கன்னங்களுக்கு பிங்க் பிளஷ் அடித்து சிம்பிளாக வந்திருந்தார்.

2016 பிலிம்பேர் விருது விழா
2016 பிலிம்பேர் விருது விழாவிற்கு நடிகை காஜல் அகர்வால் அணிந்து வந்த உடையானது டிசைனர் ஸ்வப்னில் சிந்தேவின் கலெக்ஷனில் ஒன்றாகும். இவர் அணிந்து வந்த பிங்க் நிற கவுன் ஸ்லீவ்லெஸ் மற்றும் டீப் நெக் கொண்டது. இந்த நிறம் காஜலுக்கு அழகாக இருந்தாலும், பார்ப்போரின் கண்கள் கூசும்படியும் இருந்தது. மேலும் காஜல் இந்த உடைக்கு மேக்கப் எதுவும் அதிகமாக போடவில்லை. கண்களுக்கு கண் மை, உதட்டிற்கு மின்னும் லிப் கிளாஸ் மட்டும் போட்டு வந்திருந்தார். காஜல் பிங்க் நிற செக்ஸி கவுனிற்கு நேர் உச்சி எடுத்து, ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு சிம்பிளாக வந்திருந்தார். அதோடு காஜல் அகர்வால் இந்த பிங்க் நிற கவுனிற்கு ஆபரணங்கள் அதிகம் அணியாமல், காதுகளுக்கு சிறிய சில்வர் கம்மல், கைக்கு வாட்ச் மற்றும் கைவிரலுக்கு சிறு மோதிரம் மட்டும் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

2017 ஜீ கோல்டன் விருது விழா
2017 ஆம் ஆண்டு ஜீ கோல்டன் விருது விழாவிற்கு காஜல் அகர்வால் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். காஜல் அணிந்து வந்த கவுனானது மிகவும் லோ நெக் கொண்டிருந்ததால், அது அவரது கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது. காஜல் அகர்வால் இந்த கருப்பு நிற கவுனிற்கு எப்போதும் போன்று நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு கண் மை, உதட்டிற்கு மின்னும் லிப் க்ளாஷ் போட்டு சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். ஆபரணங்கள் என்று பார்த்தால், காஜல் அகர்வால் கெஹானா ஜூவல்லர்ஸின் காதணி மற்றும் மோதிரத்தை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

2018 ஜீ தெலுங்கு அப்ஸரா விருது விழா
காஜல் அகர்வால் புடவை வடிவிலான பல உடைகளை அணிந்துள்ளார். அப்படி புடவை மாதிரியான ஒரு கருப்பு நிற உடையைத் தான் 2018 ஆம் ஆண்டு நடந்த ஜீ தெலுங்கு அப்ஸரா விருது விழாவிற்கும் அணிந்து வந்திருந்தார். இவர் அணிந்து வந்த கருப்பு நிற உடை அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா என்னும் டிசைனர்கள் வடிவமைத்தது ஆகும். இந்த உடையின் முன்புறம் மிகவும் கீழே இறங்கி V-நெக்லைன் கொண்டிருந்ததோடு, உடையைச் சுற்றி பல அடுக்கு சுருக்கங்கள் இருந்தன. மேலும் இந்த உடைக்கு காஜல் ஆபரணங்கள் எதுவும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார். உங்களுக்கு காஜல் அகர்வாலின் இந்த தோற்றம் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
