Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
2016 ஆம் ஆண்டில் நீங்கள் தவறவிட்ட ஐஸ்வர்யா ராய் பச்சனின் சில லுக்ஸ்!
உலக அழகி என்றதுமே பலரது நினைவிற்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் பச்சன் தான். அதற்கு ஏற்ப ஐஸ்வர்யா ராய் இன்னும் அழகான உடலமைப்பைக் கொண்டிருப்பதோடு, க்யூட்டான முகத்தையும் கொண்டுள்ளார். மேலும் ஐஸ்வர்யாவிற்கு எந்த ஒரு உடையும் அற்புதமான தோற்றத்தைக் கொடுக்கும்.
அதுமட்டுமின்றி, இவர் அணியும் உடைகள் அனைத்துமே அட்டகாசமாகவும், அனைவரும் பேசுமாறும் இருக்கும். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் நீங்கள் தவறவிட்ட ஐஸ்வர்யா ராய் பச்சனின் சில லுக்ஸ் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சப்யசாச்சி சூட்
இது சரப்ஜித் திரைப்பட வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்த கோல்டன் சூட்டில் வந்திருந்த போது எடுத்தது.

மோனிஷா ஜெய்சிங் வெள்ளை நிற சூட்
இது சரப்ஜித் திரைப்பட பிரஸ் மீட்டின் போது ஐஸ்வர்யா ராய் பச்சன், டிசைனர் மோனிஷா ஜெய்சிங் வடிவமைத்த வெள்ளை மற்றும் கோல்டன் நிற அனார்கலி அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

ஏகாயா லெஹெங்கா
இது இந்த வருடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற லெஹெங்கா அணிந்து பளிச்சென்று வந்த போது எடுத்தது.

மனிஷா மல்ஹொத்ரா புடவை
இது தேசிய விருது விழாவிற்கு பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவின் வெள்ளை நிற புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.

ரோஹித் பால் அனார்கலி
இது சரப்ஜித் திரைப்படத்தை விளம்பரப்படுத்த, கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கலந்து கொள்ளும் போது, ரோஹித் பால் அவர்களின் வெள்ளை நிற அனார்கலி சூட் அணிந்திருந்து வந்த போது எடுத்த போட்டோ.

ஷீர் சப்யசாச்சி
இது இந்த வருடம் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்ளும் போது சப்யசாச்சியின் ஷீர் புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.

தருண் தஹிலியானி புடவை
இது லோரியல் உமன் ஆஃப் ஒர்த் விருது விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளும் போது, வெள்ளை நிற தருண் தஹிலியானியின் புடவையை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

சப்யசாச்சி கோல்டன் சூட்
இது இந்த வருடம் மூன்றாம் முறையாக ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்த சப்யசாச்சி வடிவமைத்த உடை. இந்த கோல்டன் சூட்டை ஐஸ்வர்யா ராய் பச்சன் சரப்ஜித் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் போது அணிந்து வந்திருந்தார்.

ஸ்வாதி மற்றும் சுனைனா சிவப்பு புடவை
ஐஸ்வர்யா ராய் இந்த சிவப்பு நிற புடவையை டெல்லியில் பிரெஞ்சு ஆலோசகருடன் மதிய உணவு உண்ணும் போது அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
