Just In
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (18.01.2021): இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- 1 day ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 1 day ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 1 day ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
Don't Miss
- Sports
10 நிமிடம்.. மொத்தமாக ஆட்டத்தை மாற்றிய ஒரு ஓவர்.. ஆஸி. வீரர்களை கலங்கடித்த சிராஜ்.. செம சம்பவம்
- Movies
சில வருட காதல்.. பேட்மின்டன் வீரருடன் எப்போது திருமணம்? அப்படிச் சொன்ன நடிகை டாப்ஸி!
- News
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா.. பிப்ரவரி 1ம் தேதி முதல் சூப்பர் மாற்றம் நடைமுறை!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பலரது கவனத்தை ஈர்த்த அனுஷ்கா ஷர்மாவின் சில மறக்க முடியாத கர்ப்ப கால தோற்றங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்துள்ள நிலையில், கடந்த வருடம் ஆக்ஸ்ட் மாதம் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை விராட் கோலி அறிவித்திருந்தார். அப்போது இருந்தே இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
ஜனவரி முதல் இரண்டு வாரத்திற்குள் குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அனுஷ்காவிற்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிவித்தார். இதனால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவிற்கு பாலிவுட் நடிகர் நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் போது பல அற்புதமான உடைகளை அணிந்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்திருந்தார். இவரது கர்ப்பகால உடைகள் பல பெண்களையும் கவர்ந்தது. அப்படி பலரது கவனத்தை ஈர்த்த கர்ப்ப காலத்தில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த மறக்க முடியாத சில உடைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பீச் நிற ஜம்ப்சூட்
இது கர்ப்பமாக இருக்கும் போது அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த பாஸ்டல் பிங்க் நிற ஜம்ப்சூட். இந்த பிங்க் நிற ஜம்ப்சூட்டிற்கு அனுஷ்கா வெள்ளை நிற டி-சர்ட் அணிந்திருந்தார். இந்த உடை கர்ப்ப காலத்தில் இவருக்கு ஒரு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

மெட்டர்னிட்டி நீச்சல் உடை
கர்ப்பமாக இருக்கும் போது, அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற மெட்டர்னிட்டி நீச்சல் உடை அணிந்து, நீச்சல் குளத்தில் இருக்குமாறான ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். அனுஷ்காவின் இந்த போட்டோ இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது.

வெள்ளை நிற அனார்கலி
அனுஷ்கா கர்ப்ப காலத்தில் பிரபல டிசைனர் வடிவமைத்த வெள்ளை நிற அட்டகாசமான ஒரு அனார்கலியை அணிந்திருந்தார். அதுவும் இந்த உடையை தீபாவளியன்று அணிந்து, தனது இன்ஸ்டாவின் வெளியிட்டிருந்தார். உண்மையிலேயே இதுவும் மறக்க முடியாத அனுஷ்காவின் கர்ப்ப கால தோற்றங்களுள் ஒன்று எனலாம்.

போல்கா டாட் உடை
விராட் கோலி, அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை தெரிவிக்கும் போது வெளியிட்ட போட்டோ தான் இது. இந்த கருப்பு மற்றும் வெள்ளை நிற போல்கா டாட் உடை கர்ப்ப காலத்தில் அணிய ஏற்ற ஒரு அற்புதமான உடைகளுள் ஒன்று.

சிக்கன்கரி உடை
இது கர்ப்பத்தின் கடைசி நாட்களில் வெளியே வந்த போது அனுஷ்கா ஷர்மா டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த அழகான சிக்கன்கரி உடை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த வெள்ளை நிற உடைக்கு மேலே அனுஷ்கா ஜீன் கோர்ட் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற மேக்ஸி உடை
இது அனுஷ்கா சர்மா சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட கர்ப்ப காலத்தில் கருப்பு நிற முழங்கை அளவுள்ள எம்பிராய்டரி செய்யப்பட்ட மேக்ஸி உடை அணிந்து, தனது கணவரை கட்டி அணைத்தபடி எடுத்த போட்டோ. இதுவும் அனுஷ்காவின் மறக்க முடியாத ஒரு கர்ப்பகால தோற்றங்களுள் ஒன்று.