Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
கொரோனா பரவல் மத்தியில் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலா பால்!
தற்போது எங்கும் கொரோனா வைரஸ் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அமலா பாலின் ரகசிய திருமணம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
தற்போது எங்கும் கொரோனா வைரஸ் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அமலா பாலின் ரகசிய திருமணம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயக்குனர் பா.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டனர்.

அதன்பின் அமலா பால் காதலில் இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அப்போது அதுக்குறித்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. பின் ஒருமுறை அமலா பால் பத்திரிக்கை ஒன்றிற்கு தனக்கு ஒருவரைப் பிடித்துள்ளதாகவும், தான் உறவில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகரான பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் அமலா பாலுடன் திருமணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்த புகைப்படங்கள் வெளியிட்ட சில மணித்துளிகளில் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தையே நீக்கிவிட்டார். இப்போது இரண்டாவது திருமணத்தின் போது நடிகை அமலா பால் அணிந்திருந்த உடைகள், ஆபரணங்கள் மற்றும் சில ஃபோட்டோக்களைக் காண்போம்.

அமலா பால் உடை
நடிகை அமலா பால் நீலம் மற்றும் சிவப்பு கலந்த கண்ணாடி பதிக்கப்பட்ட மற்றும் நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிரைடல் காக்ரா சோளியை அணிந்திருந்தார். இந்த அழகான லெஹெங்காவானது ராஜஸ்தானி பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தது.

ஆபரணங்கள்
அமலா பால் அணிந்திருந்த ஆபரணங்களைப் பற்றி கூற வேண்டுமானால், இவர் ஆக்ஸிடைடு நெற்றிச்சுட்டி, நெக்லேஸ் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார். மேலும் கைகளுக்கு சிவப்பு நிற வளையலை அணிந்திருந்தார்.

மேக்கப்
அமலா பால் மேற்கொண்டிருந்த மேக்கப்பான கண்களுக்கு கண் மை, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தது உடைக்கு பொருத்தமாக இருந்தது.

பாவ்னிந்தர் சிங் தோற்றம்
பாடகரான பாவ்னிந்தர் சிங், திருமணத்தின் போது அடர் பிங்க் பார்டர் கொண்ட மஞ்சள் நிற குர்தா மற்றும் நீல நிற பைஜாமா அணிந்திருந்தார். மேலும் தலையில் மஞ்சள் நிற ராஜ்தானி ஸ்டைல் தலைப்பாகையை அணிந்திருந்தார்.

முத்தம்
இது மேற்கத்திய ஸ்டைலில் திருமணத்திற்கு பின் தம்பதிகள் முத்தத்தை பரிமாறிக் கொள்வது போல், அமலா பாலும், பாவ்னிந்தர் சிங்கும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications