Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்களுக்கு முடி கொட்டக்கூடாதா? நீளமா தென்னை மரம் மாதிரி முடி வளரணுமா? அப்ப இந்த உணவுகள சாப்பிடுங்க!
Hair Growth In Tamil: முடி உதிர்தல் என்பது இன்றைய நாளில் ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனை. மாசு, வானிலை மாற்றம், அதிகப்படியான இரசாயனப் பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் முடி உதிர்தலுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
முடி உதிர்தல், நரை முடி, வலுழவிழந்த முடி, வழுக்கை மற்றும் வறண்ட முடி போன்ற பல தலைமுடி பிரச்சனைகளை மக்கள் தினந்தினம் எதிர்கொள்கிறார்கள். இயற்கை தயாரிப்பு பொருட்களை முடியில் பயன்படுத்துவதோடு, நல்ல ஆரோக்கியமான சத்தான உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முடி உதிர்வைத் தடுத்து, புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திறவுகோல், உங்கள் உணவை துத்தநாகம் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளுக்கு மாற்றுவதாகும். இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், திடீரென முடி உதிர்வதை நிறுத்தவும் துத்தநாகம் நிறைந்த உணவுகள் உங்களுக்கு உதவும்.
நமது உடல் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து துத்தநாகத்தைப் பெறுகிறது மற்றும் உணவில் துத்தநாகத்தை சேர்த்துக் கொள்வது முடி உதிர்வதைத் தடுக்கும். இதற்குக் காரணம், நமது முடியின் வேர்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. முடி உதிர்தல் விஷயத்தில் உணவின் தாக்கம் மேற்பூச்சு பயன்பாட்டை விட அதிகமாக இருக்கும்.
ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனின் ஆய்வின்படி, தாவர அடிப்படையிலான உணவுகளில் உள்ள பைலேட்ஸ் எனப்படும் கலவையானது துத்தநாகத்தை சிறப்பாக பிணைக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள துத்தநாக உணவுகளை சாப்பிட்டு, உங்கள் முடி வளர்ச்சியை அதிகரியுங்கள்.
காளான்கள்
வைட்டமின் டி நிறைந்த காளான்கள் உங்கள் உடலுக்கு தினசரி 7 சதவிகித துத்தநாகத்தை அளிக்கும். இது துத்தநாகக் குறைபாட்டை சரிசெய்யவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகிறது. அவை மட்டுமல்லாது, காளான்களை உட்கொள்வதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். உங்கள் முடியும் பளபளப்பாக ஜொலிக்கும்.
பருப்பு வகைகள்
புரதம் மற்றும் துத்தநாகம் நிறைந்த பருப்பு வகைகள் முடியின் விரைவான வளர்ச்சிக்கும், முடி அமைப்பை மேம்படுத்தவும் உதவும். இந்த தாவர அடிப்படையிலான பருப்பு வகை உணவுகளில் துத்தநாகம் அதிகளவு நிறைந்துள்ளது. அதே நேரத்தில், இவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. 100 கிராம் கொண்டைக்கடலையில் சுமார் 1.5 மில்லி கிராம் துத்தநாகம் நிரம்பியுள்ளது.
பூசணி விதைகள்
பெரிய பூசணிக்காயில் உள்ள சிறிய விதையில் பல ஆரோக்கிய நன்மைகளை நிறைந்துள்ளன. இது முடி உதிர்தலை தடுக்கிறது மற்றும் புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதுதவிர, இந்த விதைகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த வலிமையான விதைகளின் ஒரு சேவையில் சுமார் 2 கிராம் துத்தநாகம் உள்ளது.
கீரை
பொதுவாக கீரை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரையில் 0.16 கிராம் துத்தநாகம் இருப்பதால், தினமும் இதை சாப்பிடுவது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும். மேலும், கீரை இரும்பு அளவை அதிகரிக்க உதவுகிறது. இது முடி அமைப்பை மேம்படுத்தவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதனால், உங்கள் முடி நீளமாக வளர்வதோடு, மென்மையாகவும் ஜொலிக்கும்.



Click it and Unblock the Notifications

