Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
கரும்புள்ளிகள் உங்க அழகை கெடுக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 2 முறை யூஸ் பண்ணுங்க..
Face Scrubs For Blackheads: தற்போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான சரும பிரச்சனை தான் கரும்புள்ளிகள். இந்த கரும்புள்ளிகளானது மூக்கின் மேல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், அதிகப்படியான எண்ணெய், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவற்றின் காரணமாக வரக்கூடியது. இந்த கரும்புள்ளிகள் சருமத்தின் மென்மைத்தன்மையை பாதிப்பதோடு, சரும அழகையே மோசமாக வெளிக்காட்டும்.
இப்படிப்பட்ட கரும்புள்ளிகளை போக்க ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க்குகளை விட, ஃபேஸ் ஸ்க்ரப்புகள் பெரிதும் உதவி புரியும். அதோடு இந்த ஃபேஸ் ஸ்க்ரப்புகள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முகத்தை பொலிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல், சருமத்துளைகளை சுத்தம் செய்து, கரும்புள்ளிகள் தலைத் தூக்குவதைத் தடுக்கும்.

மேலும் இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து, செல்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் சரும சுருக்கங்களைத் தடுத்து, சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ள உதவும். இப்படிப்பட்ட ஃபேஸ் ஸ்கரப்புகள் கடைகளில் ஏராளமாக விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல்கள் சில சமயங்களில் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இந்நிலையில் இயற்கை பொருட்களே சருமத்திற்கு பாதுகாப்பானது.
சொல்லப்போனால் நம் வீட்டு சமையலறையிலேயே ஏராளமான ஃபேஸ் ஸ்க்ரப் பொருட்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் பளிச்சென்று பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது கரும்புள்ளிகளைப் போக்கும் சில நேச்சுரல் ஃபேஸ் ஸ்க்ரப்களைக் காண்போம்.
1. எலுமிச்சை மற்றும் உப்பு
* இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பிற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நீரில் கழுவி துடைத்துவிட்டு, பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. சந்தன பவுடர், ஜாதிக்காய் பவுடர் மற்றும் பால் ஸ்க்ரப்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் சிறிது ஜாதிக்காய் பவுடரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு முகத்தைக் கழுவி துடைத்துவிட்டு, பின் கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் கைகளை நீரில் நனைத்து, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத் துளைகள் சுருங்கி, கரும்புள்ளிகள் வருவதும் குறையும்.
3. நாட்டுச்சர்க்கரை மற்றும் வெள்ளரிக்காய்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரையை எடுத்து, வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
4. பட்டை மற்றும் தேன்
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் பட்டை பொடியை எடுத்து, தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை கழுவ வேண்டும்.
5. க்ரீன் டீ
* க்ரீன் டீ தயாரித்த பின், அந்த பையை தூக்கிப் போடாமல், அந்த இலைகளை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி செய்யும் போது, அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் நச்சுக்களை போக்குவதோடு, கரும்புள்ளிகளையும் அகற்றும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications