Latest Updates
-
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க..
Aloe Vera Masks In Tamil: ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடியும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட தலைமுடி உதிரும் பிரச்சனையை தற்போது நிறைய பேர் எதிர்கொள்கின்றனர். என்ன தான் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்வது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், தலையில் கையை வைக்கும் போதெல்லாம் கொத்து கொத்தாக தலைமுடி உதிர்கிறது என்றால், தலைமுடிக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

அதுவும் தலைமுடி அதிகம் உதிர்ந்து எலிவால் போன்று தலைமுடி மாறுவதைக் கண்டால், தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் கற்றாழை கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள்.
ஏனெனில் கற்றாழையில் உள்ள சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது, தலைமுடியை வலுப்படுத்துகிறது, ஸ்கால்ப்பில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கிறது. இவ்வளவு நன்மைகளை வழங்கும் கற்றாழையை கொண்டு ஹேர் பேக் தயாரித்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர, தலைமுடியின் அடர்த்தியிலும், வளர்ச்சியிலும் நல்ல மாற்றத்தைக் காணலாம். கீழே உங்களுக்காக சில கற்றாழை ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
2. கற்றாழை மற்றும் வெங்காய சாறு மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/4 கப் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
3. கற்றாழை மற்றும் வெந்தய ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/4 கப் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனிப்பகுதி வரை தடவி, 30-45 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை நன்கு அலச வேண்டும்.
4. கற்றாழை, ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு ஷவர் கேப் அணிந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
5. கற்றாழை ஜெல்
* இதற்கு வெறும் கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் பலவீனமாக இருக்கும் தலைமுடியை வலுவடையச் செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
