Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பிற்கு பதிலாக இத யூஸ் பண்ணுங்க... சீக்கிரம் வெள்ளையாவீங்க...
Skin Care Tips In Tamil: இன்றைய காலத்தில் மக்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். தங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சருமத்திற்கு என்று பிரத்யேகமாக பல பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதில் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க பொதுவாக பயன்படுத்தும் பொருள் தான் ஃபேஸ் வாஷ்.
ஆனால் கெமிக்கல் கலந்த ஃபேஸ் வாஷை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தால், சரும செல்கள் தான் சேதமடையும். இம்மாதிரியான சூழ்நிலையில் கெமிக்கல் கலந்த ஃபேஸ் வாஷைக் கொண்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட பொருட்களைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யுங்கள்.

இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சரும நிறம் மேம்பட்டு, முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். இப்போது ஃபேஷ் வாஷிற்கு பதிலாக, வேறு எந்த பொருட்களைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம் என்பதைக் காண்போம்.

பால்
உங்கள் முகத்தில் அழுக்குகள் நிறைய இருந்தால், காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும். அதற்கு பஞ்சுருண்டையில் பாலை நனைத்து, முகத்தைத் துடைத்து, நன்கு காய்ந்த பின், நீரில் நனைத்த சுத்தமான காட்டன் கொண்டு துடைத்தெடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ரோஸ் வாட்டர்
முகத்தில் உள்ள அழுக்கை நீக்க ஒரு நாளைக்கு 2-3 முறை ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்தெடுங்கள். அதற்கு பஞ்சுருண்டையில் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதைப் பயன்படுத்தினால் சோப்பு, ஃபேஸ் வாஷ் என்று எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

வெள்ளரிக்காய்
நீங்கள் உங்கள் முகத்தில் ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பு பயன்படுத்த விரும்பவில்லையென்றால், வெள்ளரிக்காய் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் ஈரமான பஞ்சுருண்டை கொண்டு துடைத்து எடுங்கள். இல்லாவிட்டால் வெள்ளரிக்காயை துருவி சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.

தயிர் மற்றும் தேன்
முகத்தில் உள்ள அழுக்கை நீக்க தேன் மற்றும் தயிரைப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, முகத்திற்கு பொலிவை தருகிறது. அதற்கு 1 டீஸ்பூன் தயிரில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.

தக்காளி
தக்காளியும் சருமத்தில் உள்ள அழுக்கை போக்க உதவும். அதற்கு தக்காளியின் ஒரு துண்டை எடுத்து முகத்தில் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலின் மூலம் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கும் சரும அழுக்கை நீக்க உதவும். அதற்கு உருளைக்கிழங்கு துண்டு அல்லது துருவிய உருளைக்கிழங்கை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஈரமான பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
