Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆண்களே! உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா? அப்ப இதுதான் அதுக்கு காரணம்...
ஒருவருக்கு சரும பிரச்சனைகள் அதிகம் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற டயட் தான். ஒருவரது டயட் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சருமத்தையும் தான் பாதிக்கும்.
பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்து சோர்ந்துவிட்டீர்களா? அழகாக ஜொலிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் மேற்கொண்டு களைத்துவிட்டீர்களா? அழகாக இருக்க ஆசைப்பட்டால், அழகைப் பாழாக்கும் சரும பிரச்சனைகள் வருவதற்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெறும் மேக்கப் மட்டும் ஒருவரை அழகாக்கிவிடாது. நடிகர், நடிகைகள் அழகாக காட்சியளிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அவர்களது டயட் தான்.

ஆம், ஒருவருக்கு சரும பிரச்சனைகள் அதிகம் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற டயட் தான். இப்படிப்பட்ட டயட்டினால் தான் கருவளையங்கள், முகப்பருக்கள், வறட்சியான சருமம், வெளிரிய சருமம், கருமையான உதடுகள் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. ஒருவரது டயட் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சருமத்தையும் தான் பாதிக்கும்.
ஆகவே ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமானால், உடலுக்கு ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து வெளியேற்றும் மற்றும் பழைய செல்களுக்கு பதிலாக புதிய சரும செல்களை உற்பத்தி செய்யும் திறன் முக்கியம். அதற்கு பல்வேறு வைட்டமின்கள் தேவை. அந்த வைட்டமின்களை நல்ல ஆரோக்கியமான டயட்டின் மூலம் பெற முடியும். இப்போது சரும பிரச்சனைகளையும், அந்த சரும பிரச்சனைகள் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள் குறித்தும் காண்போம்.

முகப்பரு
பெரும்பாலானோர் கஷ்டப்படும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். முகப்பருக்கள் 16-22 வயதிற்குட்பட்டவர்களுக்கு அதிகம் வருவதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள் என நம்பப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் காரமான உணவுகளும் முகப்பருக்களுக்கு காரணம். எனவெ முகப்பருக்களைப் போக்க டயட்டில் இஞ்சி, மஞ்சள், ஆலிவ் ஆயில் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருவளையங்கள் மற்றும் முதுமை சுருக்கங்கள்
நீங்கள் அதிகளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொண்டால், என்ன நடக்கும் என்று தெரியுமா? இதனால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் மற்றும் முகத்தில் சுருக்கங்கள் தான் வரும். பிரட், சர்க்கரை, அரிசி, கோதுமை மாவு போன்றவை சருமத்தின் ஆயுட்காலத்தை வேகமாக அழிக்கும் உணவுகளாகும்.
அதில் சர்க்கரை சரும கொலாஜனை அழித்து, சுருக்கங்களை உண்டாக்கும். ஆகவே கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வராமல் இருக்க நினைத்தால், சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளைஅளவாக உட்கொள்ளுங்கள்.

வெள்ளை திட்டுக்கள் மற்றும் சொரியாசிஸ்
முகத்தில் வெள்ளைத் திட்டுக்கள் மற்றும் சொரியாசிஸ் வருவதற்கு காரணம் கல்லீரல் பிரச்சனைகள் தான். கல்லீரல் தான் உடலில் இருந்து அழுக்குகள் மற்றும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. ஆனால் அதற்கு போதுமான நீர் உடலில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், கல்லீரலால் சரியாக செயல்பட்டு, இரத்தத்தில் இருந்து அழுக்குகளை பிரித்தெடுக்க முடியும்.
ஒருவேளை உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், கல்லீரலின் சுத்தப்படுத்தும் செயல்பாடு பாதிக்கப்பட்டு, முகத்தில் வெள்ளையான திட்டுக்களை உண்டாக்கும். ஆகவே சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும், சுத்தமாகவும் இருக்க நினைத்தால், தினமும் 3 லிட்டர் நீரைக் குடியுங்கள்.

கருமையான உதடுகள்
பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு தான் உதடுகள் கருமையாக இருக்கும். சிகரெட்டுகள் புற்றுநோயை உண்டாக்குவது மட்டுமின்றி, உடலின் அனைத்து உறுப்புக்களையும் சேதப்படுத்தும். அதிலும் தினமும் புகைப்பிடித்தால், மெதுவாக உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு, நாளடைவில் செயல்பாடுகள் முழுமையாக நின்றுவிடும்.
சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்களது உதடுகள் மட்டுமின்றி, ஈறுகளும் கருமையாக இருக்கும். மேலும் உதடுகளில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதும் உதடுகளை கருமையாக்கும். எனவே இதைத் தவிர்க்க தினமும் முகம் மற்றும் கைகளில் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். உதடுகளில் லிப் பாம் தடவுங்கள். முக்கியமாக சிகரெட் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
இப்போது ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்களைக் காண்போம்.

டிப்ஸ் #1
ஒருவர் தினமும் போதுமான அளவு நீரைப் பருக வேண்டியது முக்கியம். இதனால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதோடு, சருமம் அழகாகவும், பொலிவோடும் இருக்கும். ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் நீரைப் பருக வேண்டும்.

டிப்ஸ் #2
சருமம் மென்மையாகவும், அழகாகவும் இருக்க, சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளான தக்காளி, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அனைத்து வகையான சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறனை உடலுக்கு வழங்கும்.

டிப்ஸ் #3
எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் காரமான உணவுகள் உண்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, சருமத்தையும் சேதப்படுத்தும்.

டிப்ஸ் #4
பலவண்ண காய்கறிகளை டயட்டில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பல வண்ண காய்கறிகளான கத்திரிக்காய், பூசணிக்காய், பசலைக்கீரை, பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்றவற்றில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.



Click it and Unblock the Notifications
