Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
ஒரே வாரத்தில் இப்படி இருந்த உங்க முகத்த இப்படி மாற்ற, இந்த 1 விதையை மட்டும் வீட்டுல வச்சுக்கோங்க!
உடலில் இருக்க கூடிய பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால், முகத்தில் இருக்க கூடிய பிரச்சினைகளை தீர்க்க சிறந்த வழி மிக குறைவாகவே உள்ளது. முகத்தில் சாதாரணமாக ஒரு சின்ன கீறல் விழுந்தால் கூட அதை நம்மால் தாங்கி கொள்ள இயலாது. அப்படி இருக்க முகத்தில் பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், கொப்புளங்கள் போன்றவை ஏற்பட்டால் அவ்வ்ளவு தான்.

இந்த பிரச்சினைகள் அனைத்திற்குமே எளிய வழி உள்ளது. அதுவும் சாதாரணமாக கிடைக்க கூடிய ஒரு வகை மூலிகை பழத்தில் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கருப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் இருக்கும் இந்த பழத்தை நாம் உட்கொள்ளவும் செய்யலாம். இனி இந்த பழத்தின் முழு பயன்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

நலம் தரும் நாவல்..!
நம் பள்ளி பருவத்தில் ஒரு சில பழங்களை நம் பள்ளி வாசலில், ஒரு வயதான பாட்டி அல்லது தாத்தா விற்று கொண்டிருப்பார். ஈச்சப்பழம், இலந்தை பழம், கொடுக்களிக்கா போன்றவை அவற்றில் மிகவும் பிரபலமானவை . அந்த வகையில் நாவல் பழம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இது அதிக நன்மைகளை தர கூடியது.

சத்து நிறைந்த நாவல்...!
பொதுவாக சர்க்கரை நோயை மட்டும்தான் நாவல் குணப்படுத்தும் என்ற எண்ணம் மக்களிடம் பரவி உள்ளது. ஆனால், இத்துடன் பல்வேறு நலன்களை இது தர கூடியது. இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்...
வைட்டமின் சி 18 mg
கால்சியம் 15 mg
மெக்னீசியம் 35 mg
கரோட்டின் 48 ug
இரும்பு சத்து 1.41 mg
நீர்சத்து 84.75 gm
பாஸ்பரஸ் 15 mg
சோடியம் 26.2 mg

பருக்களை ஒழிக்க!
முகத்தில் சேர்ந்துள்ள பருக்களை நீக்க நாவலின் இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை...
நாவல் விதைகள்
பசும்பால் 2 ஸ்பூன்
ஆரஞ்சு தோல்
பாதாம் எண்ணெய் சிறிது
பன்னீர் சிறிது
மைசூர் பருப்பு பொடி 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் நாவல் பழத்தின் விதையை மட்டும் தனியாக எடுத்து, காய வைத்து பொடி போன்று தயாரித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் நீங்கும்.
இதற்கு மாறாக பொடி செய்த நாவல் விதை, பொடி செய்த ஆரஞ்சு தோல், பாதாம் எண்ணெய், பன்னீர், பொடி செய்த மைசூர் பருப்பு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து நீரால் கழுவலாம். இதுவும் பருக்களை விரைவிலே ஒழித்து கட்டும் எளிய வழி.

எண்ணெய் பசை சருமத்திற்கு...
முகம் முழுக்க எண்ணெய் வடிகிறதா..? இது உங்கள் முழு அழகையும் கெடுத்து விடுகிறதா...? இனி கவலையை விட்டு தள்ளுங்கள். இந்த நாவல் பழங்கள் இவற்றிற்கு சிறந்த பயனை தருகிறது. இவற்றில் உள்ள வைட்டமின் சி முக அழகை பராமரிக்க உதவும். அதற்கு இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.
தேவையானவை :-
நெல்லிக்காய்
நாவல்
பார்லி மாவு
ரோஸ் நீர்

செய்முறை :-
முதலில் நாவல் பழத்தின் சதை பகுதியை தனியாக எடுத்து அரைத்து கொள்ளவும். அடுத்து நெல்லிக்காய் தூள், பார்லி மாவு கலந்து கொண்டு அவற்றுடன் ரோஸ் நீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால், முகத்தின் எண்ணெய் பசை நீங்கும். மேலும் சருமத்தின் எண்ணெய் தன்மை குறைந்து ஈரப்பதமாகும்.

வெண்மையான முகத்திற்கு
முகம் மிகவும் வெண்மையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை...
நாவல் விதைகள்
கடலை மாவு 1 ஸ்பூன்
எலுமிச்சை தோல்
பாதாம் எண்ணெய் சிறிது
பன்னீர் சிறிது

தயாரிப்பு முறை
நாவல் பழத்தின் விதையை பொடி செய்து அதனுடன் கடலை மாவு, காய வைத்து பொடி செய்த எலுமிச்சை தோல், ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.
அதன் பின் பாதாம் எண்ணெய், பன்னீர் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடத்திற்கு பின் முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் வெண்மை பெறும்.

மென்மையான பாதத்திற்கு...
பாதங்கள் நம் சிறந்த நண்பர்கள். இவர்கள் இல்லையென்றால் நம்மால் எந்த இடத்திற்கும் போக இயலாது. நாம் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு செல்லும் பாதங்களை நாம் பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு இந்த நாவல் பேக் நன்கு உதவும்.
தேவையானவை :-
நாவல் பழம்
தக்காளி சாறு
எலுமிச்சை சாறு

செய்முறை :-
முதலில் நாவல் பழத்தின் சதை பகுதியை தனியாக எடுத்து, அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு சேர்த்து பாதத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் அழுக்குகள் நீங்கி பாதங்கள் சுத்தம் ஆகும். அத்துடன் அழகான பாதத்தையும் பெறலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பற்களின் அழகிற்கு
கறைபடிந்த பற்கள் முகத்தின் அழகை கெடுத்து விடும். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி தர நாவல் பழம் உள்ளது. அத்துடன் ஈறுகளையும் உறுதியாக வைத்து கொள்ளும். இதற்கு தேவையான பொருட்கள்...
நாவல் இலையின் சாம்பல்
பாதாம் கொட்டையின் ஓட்டின் சாம்பல்

தயாரிப்பு முறை
முதலில் நாவல் இலையை எரித்து சாம்பலாக்கி கொள்ளவும். அதன் பின்னர் பாதாம் கொட்டையை எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும்.
பின் இவை இரண்டையும் கலந்து தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் பிரகாசமாக இருக்கும். கூடவே உறுதியான பற்களும் உங்களுக்கு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











