Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் உபயோகித்தால் உண்டாகும் பிரச்சனைகள் பற்றி இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெயே அழுக்குகளையும் இறந்த செல்களையும் சரும துவாரங்கள் வழியாக வெளியேற்றும். வெளித் தோல் பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அவை குளிக்கும்போது லேசாக சோப்பை போட்டாலே போய்விடும்.
ஆனால் சோப்பை நுரைவரும் அளவிற்கு போட்டால்தான் சிலருக்கு திருப்தியே உண்டாகும். அப்படி செய்தால் இயற்கை எண்ணெய்யை முழுவதும் அகற்றுவதோடு, அழுக்குகளும் சேர்ந்து சரும அலர்ஜியை உண்டாக்கும்.
விஷயம் இப்படியிருக்க, இதில் ஒரே ஒரு சோப்பை குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களும் உபயோகிப்பார்கள். இது நல்லதா என சரும மருத்துவர் கூறுகிறார் தொடர்ந்து படியுங்கள்.

தொற்று :
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்திவிடும்.
ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது. அதேபோல் வியர்வையால் உண்டாகும் கிருமிகளும் மற்றவர்களும் தொற்றும் வாய்ப்புண்டு.

சரும வகை :
ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான சருமம் அமைந்திருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

சோப்பின் அமில சம நிலை :
சிலருக்கு என்ணெய் சருமமாக இருக்கும். இன்னும் சிலருகு வறண்ட சருமமாக இருக்கும். எது எப்படியோ எல்லாரும் பொதுவாக பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

எண்ணெய் சருமம் :
கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

வறண்ட சருமம் :
வறண்ட சருமம் இருப்பாவ்ரகள் க்ரீம் நிறைந்த சோப் உபயோகிப்பதால் சருமம் வறட்சி, சுருக்கம், அலர்ஜி போன்றவற்றிலிருந்து தப்பிக்கும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
