உங்களுக்கு மரு இருக்கா? இதோ அதனைப் போக்க வலியில்லாத வீட்டு வைத்தியம் !!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஸ்கின் டேக் என்பது சின்ன, மென்மையான, சரும நிறத்தில் வரும் தோல் மருக்கள் வளர்ச்சி ஆகும். இது மடிப்புப் பகுதியான ஆசன வாய், அக்குள், கண் இமைப்பகுதி, கழுத்து, மார்பு அடிப்பகுதி, இடுப்பு மற்றும் பல இடங்களில் வரும் சரும பிரச்சினை ஆகும்.

சருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்!!!

இது ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லாரும் எதிர்கொள்ளும் பிரச்சினை ஆகும். அதிலும் வயதானவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், கருவுற்ற பெண்கள் இதனால் பாதிப்படைகின்றனர். வலியில்லாத இந்த ஸ்கின் டேக்கை கண்டு கொள்ளலாமல் விட்டால் உடம்பு முழுக்க பரவ வாய்ப்புள்ளது.

Painless Home Remedies For Skin Tags On Face And Body

எனவே அதை நீக்க சில வீட்டு வைத்தியங்களை கூற உள்ளோம். ஒன்றிரண்டு இருக்கும் போதே இதை கவனிப்பது நல்லது.

இந்த முறைகளை பயன்படுத்தி உங்க ஸ்கின் டேக்கை எளிதில் சரியாக்கி விடலாம். இது ஒரு வலியில்லாத முறைகளாகும். இதை வழக்கமாக பயன்படுத்தினால் நல்ல பலனை காணலாம்.

தயவு செய்து உங்கள் ஸ்கின் டேக்கை பிடுங்கவோ, கிள்ளவோ செய்யாதீர்கள். அது உங்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சரி வாங்க இப்போ அந்த வீட்டு முறைகளை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நூல் மற்றும் டென்டல் ப்ளோஸ்

நூல் மற்றும் டென்டல் ப்ளோஸ்

முதல் நாள் ஒரு எளிதான முறை. இதற்கு மருந்து தடவப்பட்ட நூல் அல்லது டென்டல் ப்ளோஸ்யை எடுத்து கொள்ளவும். இந்த நூலை அல்லது டென்டல் ப்ளோஸ்யை கொண்டு ஸ்கின் டேக்கை சுற்றி கட்டிக் கொள்ள வேண்டும்.

உங்கள் நூல் தூசி நிறைந்ததாக மாறி விட்டால் அடிக்கடி மாற்றிக் கொள்ளவும். நூல் காட்டுவதால் ஸ்கின் டேக் பகுதியில் இரத்த ஓட்டம் தடைபட்டு அது தானாகவே உதிர்ந்து விடும்.

நெயில் பாலிஷ் ரீமுவரால் மூச்சுப் திணற வைத்தல்

நெயில் பாலிஷ் ரீமுவரால் மூச்சுப் திணற வைத்தல்

இந்த முறை நெயில் பாலிஷ் ரீமுவரை கொண்டு ஸ்கின் டேக்கை போக்குதல் இதற்கு மூச்சுப் திணறல் என்று பெயர். காரணம் ஸ்கின் டேக் பகுதியில் ஆக்ஸிஜன் கிடைப்பதை தடைபடுத்துதல்.

ஸ்கின் டேக் இருக்கும் பகுதியில் நெயில் பாலிஷ் ரீமுவரை தடவி கேஜால் மூடி விட வேண்டும். அப்பப்பா கேஜை மாற்றிக் கொள்ளவும். எனவே அந்த சரும பகுதிக்கு ஆக்ஸிஜன் தடைபடுவதால் ஸ்கின் டேக் எளிதில் உதிர்ந்து விடும் .

அத்திப் பழ தண்டு:

அத்திப் பழ தண்டு:

இந்த முறையில் ஸ்கின் டேக்கை சரி செய்ய நமக்கு ஸ்பிக் (fig tree) மரத்தின் தண்டு பகுதியின் ஜூஸ் தேவைப்படுகிறது. இதன் தண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழங்கள் வேண்டாம்.

தண்டை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்துக் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு தடவை என்று ஸ்கின் டேக் மீது தடவி வர வேண்டும். இதற்கு அந்த பகுதியை எதுவும் கொண்டு மூட வேண்டாம். ஜூஸை மட்டும் தடவி விட்டு விட்டால் போதுமானது.

டேன்டேலியன் தண்டு

டேன்டேலியன் தண்டு

இந்த, தண்டு பார்ப்பதற்கு பால் போன்ற திரவத்துடன் காணப்படும். இது ஸ்கின் டேக்க்கு மிகவும் சிறந்தது. இந்த தண்டின் பாலை ஸ்கின் டேக் மீது தடவி நன்றாக காய்ந்த பிறகு ஒவ்வொரு தடவையும் தடவ வேண்டும். காய காய தொடர்ந்து தடவ வேண்டும்.

விட்டமின் ஈ மாத்திரைகள் :

விட்டமின் ஈ மாத்திரைகள் :

விட்டமின் ஈ மாத்திரைகளை உடைத்து ஸ்கின் டேக் உள்ள பகுதியில் தடவலாம் அல்லது விட்டமின் ஈ ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டாம்.

இந்த முறையை ஸ்கின் டேக் போகும் வரை செய்யலாம். விட்டமின் ஈ ஆயில் தடவுவதற்கு முன்னாடி ஸ்கின் டேக் பகுதியை நன்றாக சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.

ஆர்கனோ ஆயில்

ஆர்கனோ ஆயில்

இந்த ஆயில் மார்க்கெட்டிலும் கிடைக்கின்றன. இல்லையென்றால் வீட்டிலும் தயாரிக்கலாம். ஆர்கனோ மற்றும் ஆலிவ் ஆயிலை எடுத்து நன்றாக கலந்து ஒரு மாதத்திற்கு வைக்க வேண்டும்.

உங்கள் ஆர்கனோ ஆயில் ரெடி. இதை ஸ்கின் டேக் பகுதியில் தடவி வந்தால் சரியாகி விடும்.

அயோடின்

அயோடின்

நீர்ம நிலை அயோடின் ஸ்கின் டேக்கை சரி செய்ய உதவுகிறது. அதிகமாக இதை தடவினால் பாதிப்பு ஏற்படும். எனவே இதை காது குடையும் பட்ஸ்யை கொண்டு ஸ்கின் டேக் பகுதியில் தடவலாம். மேலும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை தடவி விட்டு அதன் மேல் இந்த அயோடின் சொட்டை தடவலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Painless Home Remedies For Skin Tags On Face And Body

Painless Home Remedies For Skin Tags On Face And Body
Story first published: Tuesday, August 1, 2017, 11:44 [IST]