Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குதிகால் வெடிப்பை போக்கும் அருமையான பாட்டி வைத்தியங்கள்!!
என்ன செய்தாலும் திரும்ப திரும்ப வருகிறதே என கவலைக் கொள்கிறீர்களா? இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன் தரும்.
பாதவெடிப்பு அசௌகரியமாகத்தான் இருக்கும். நல்ல அழகான உடையை உடுத்தி, இன்னும் முகத்தை அஹ்ழ்கௌபடுத்திக் கொண்டு ஆனால் காலில் வெடிப்புடன் வெளியே சென்றால்,
அந்த ஒரு பிரச்சனையாலேயே மற்ற அலங்காரங்கங்கள் வீணாகிவிடும்.
நம்மை குறைவாகவும் மற்றவர்கள் மதிப்பிடக் கூடும்.
மற்றவர்கள் என்றில்லாமல் பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை சார்ந்த விஷயமே.
என்ன செய்தாலும் திரும்ப திரும்ப வருகிறதே என கவலைக் கொள்கிறீர்களா? இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன் தரும். பாதங்கள் மிருதுவாகி பளிச்சிடும் என்பது உண்மை.

தேன் மற்றும் அரிசி மாவு :
பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்

வேப்பிலை பேஸ்ட் :
கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும்.
15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

பப்பாளி ஸ்க்ரப் :
நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். . இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கு :
உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

வெந்தயக் கீரை :
மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்.
மேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும்.

வாழைப்பழம் :
வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.



Click it and Unblock the Notifications
