Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
அழகை அதிகரிக்க நினைக்கும் ஒவ்வொரு ஆணும் தினமும் கடைப்பிடிக்க வேண்டியவைகள்!
பொதுவாக இந்திய ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை காட்டிக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் அவர்களுக்கு சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முகப்பருக்கள், பொலிவிழந்த முகம், சருமத்தில் சுருக்கம் போன்றவை இந்திய ஆண்களின் அழகையும், இளமைத் தோற்றத்தையும் பாதிக்கின்றன.
அக்காலத்தில் ஆண்கள் அழகின் மீது அக்கறை காட்டாமல் இருந்ததற்கு காரணம், அவர்களது மாசற்ற சுற்றுச்சூழல் தான். ஆனால் இப்போதோ மாசுக்கள் இல்லாத இடங்களே இல்லை. இதனால் முதலில் பாதிக்கப்படுவது நம் சருமம் தான். ஆகவே இக்காலத்தில் ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அக்கறையின்றி இருந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வேண்டியது தான்.
இங்கு ஆண்களின் அழகை அதிகரிக்க தினமும் பின்பற்ற வேண்டியது என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம்.

தண்ணீர்
சருமத்தின் சிறந்த நண்பன் தண்ணீர் தான். சரும அழகை அதிகரிக்க வேண்டுமானால் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நேச்சுரல் ஸ்கரப்
காற்று மாசுபாட்டினால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதனால் முகம் பொலிவிழந்து அசிங்கமாக இருக்கிறது. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், கெமிக்கல் பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி தேய்த்து கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதும் நீங்குவதோடு, முகத்தில் உள்ள தழும்புகளும் மறைந்து, முகம் அழகாக காட்சியளிக்கும்.

சன் ஸ்க்ரீன்
ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டையின் காரணமாக சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குகின்றன. இப்படியே சூரியக்கதிர்கள் சருமத்தைத் தாக்கினால், சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி சருமம் கருமையாவதோடு, சரும புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் முன் ஆண்கள் சரும செல்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நல்ல SPF சன் ஸ்க்ரீன் லோசனை கை, கால்களுக்கு தடவிக் கொள்ள வேண்டும்.

நல்ல மாய்ஸ்சுரைசர்
தினமும் இரண்டு முறை சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டியது அவசியம். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அதில் பகலில் நீர்மமான மாய்ஸ்சுரைசரையும், இரவில் அடர்த்தியான மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் போதிய நீர்ச்சத்துடன் இருக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
அடிக்கடி டீ, காபி குடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எனவே அழகை அதிகரிக்க விரும்பினால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள்.

உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்
உணவின் சுவையை அதிகரிக்க உப்பு, சர்க்கரை போன்றவை அவசியம் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக உப்பை தவிர்த்திடுங்கள். ஏனெனில் உப்பு முகத்தை வீங்கச் செய்யும். எனவே உணவில் அளவாக உப்பை சேர்த்து சாப்பிடுங்கள்.

நல்ல தூக்கம்
முக்கியமாக இரவில் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் தான் பாதிக்கப்பட்ட சரும செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் அந்த ஓய்வு சரியான அளவில் கிடைக்காவிட்டால், முகம் பொலிவிழந்து தான் காட்சியளிக்கும்.



Click it and Unblock the Notifications
