Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யும் எண்ணெய் !!
சிறிய கண்களுக்கு கச்சிதமா அழகு சேர்க்கும் பெரிய இமைகள். நிறைய பேருக்கு கண்கள் பெரியதாக இருக்கும். ஆனால் இமைகள் போதிய வளர்ச்சி இருக்காது. இது ஒரு குறையாக தெரியும். இமைகள் நீண்டு அழகாக வளர ஒரு அழகு குறிப்பு உங்களுக்காக இங்கே காத்திருக்கிறது.

செயற்கை இமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. கண்களில் இருக்கும் சருமம் மிகவும் மென்மையானது. இந்த செயற்கை இமைகள் அலர்ஜி, அரிப்பு, தடிப்பை ஏற்படுத்தும்.
அதே போல், அடர்த்தியாக தெரிய வேண்டுமென்பதற்காக மஸ்காரா சிலர் போடுவார்கள். அதுவும் தினம் உகந்தது அல்ல. இயற்கையாக இமைகளுக்கு போஷாக்கு அளித்திடுங்கள் எண்ணெயின் மூலம்.
இங்கே கொடுத்திருக்கும் எண்ணெய் கண்களின் முடியின் வேர்க்கால்களை தூண்டி, நீண்டு வளரச் செய்யும். எப்படி அதனை செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை ;
விளக்கெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
ஈமு எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - அரை டீ ஸ்பூன்
விட்டமின் ஈ எண்ணெய் - 2 கேப்ஸ்யூல்
இந்த எண்ணெய்கள் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தவை. எந்த தீங்கும் விளைவிக்காதவை. விளக்கெண்ணெய் அடர்த்தியாக இமைகளை வளர்ச் செய்யும்.
ஈமு எண்ணெய் இமைகளுக்கு பலமும் போஷாக்கும் தரும். தேங்காய் எண்ணெய் மற்றும், விட்டமின் ஈ ஈரப்பததை அளித்து, கண்களை மென்மையாக்கும்.
செய்முறை :
மேற்கூறிய எல்லா எண்ணெய்களையும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வருடம் வரை வைத்து உபயோகிக்கலாம். தினமும் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை கண் இமை மற்றும் புருவத்திலும் தடவி இதமாக மசாஜ் செய்யவும். ஒரு மாதத்திலேயே வித்யாசம் காண்பீர்கள்.



Click it and Unblock the Notifications



