Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முகத்தில் வரும் வேர்க்குரு போன்ற சிறு பொரிகளுக்கு இதோ 2 செய்முறைகள் !!
சருமத்தில் வரும் சிறு அலர்ஜிகளுக்கு கடைகளில் விற்கும் க்ரீம், லோஷன் ஆகிவாய் போட்டால் அவை பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தி விடும். இதற்கு இயற்கையான ஆயுர்வேத குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
சிலருக்கு முகத்தில் சிறு சிறு பொரிகள் இருக்கும். இதற்கு காரணம் முகத்தில் படும் முடிக்கற்றைகளால் உண்டாகும் அலர்ஜிதான்.
கூந்தலின் கடினம் சருமத்தில் பாதிப்பேற்பட்டு இது போல் தோன்றுகிறது.

இதற்கு இயற்கையான எளிய இரண்டு தீர்வுகள் உண்டு. உபயோகப்படுத்திப் பாருங்கள். பொரிகள் மறைவதோடு சருமம் மின்னும்.

செய்முறை - 1
ரோஜா இதழ்களை சந்தன பலகையில் வைத்து மைய அரையுங்கள். அதனுடன் அதே அளவு சந்தனம் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

செய்முறை - 1
பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால் பொரிகள் மறையத் தொடங்கும்.

செய்முறை - 2
தேவையானவை :
கசகசா - 2 டீஸ்பூன்
துளசி இலை - 10

செய்முறை - 2
இவ்விரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பருத்தி துணியினை குளிர்ந்த நீரில் முக்கி பிழிந்து அதனை முகத்தில் போடுங்கள்.
அதன் மீது இந்த கலவையை பற்று போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் பலன் தெரியும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள்.
துணியில்லாமலும் முகத்தில் போடலாம். ஆனால் அதன் சாறு எளிதில் வழிந்துவிடும். அதற்காகத்தான் துணியில் போட்டால் எளிதில் சருமம் உறிஞ்சிக் கொள்ளும்.

செய்முறை - 2
இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும்.



Click it and Unblock the Notifications