உட்காரும் இடத்தில் பருப் பிரச்சனையா? உடனே தீர்வு காண இதை படிங்க!

Posted By: Hemalatha
Subscribe to Boldsky

சிலருக்கு பின்புறத்தில் , புட்டத்தில் பருக்கள் போன்று சிறு சிறு பொறிகள் வரும். இதனால் சரியாக உட்கார முடியாமல் எரியும். வியர்வை பிசுபிசுப்பில் இன்னும் அதிகமாக பரவி,வலியை ஏற்படுத்தும்.

Effective methods for butt acne

உங்கள் முகத்தினில் வரும் முகப்பருவிற்கு எளிதில் அடுத்தவரிடம் யோசனைகள் கேக்கலாம் . ஆனால் புட்டத்தில் வரும் சிறு பருக்களுக்கு வெளிப்படையாக யாரிடம் கேட்க முடியாது என சங்கோஜப்படுகிறீர்களா?கவலையை விடுங்கள் இதோ உங்களுக்காக எளிய முறையில் வீட்டிலேயே தீர்வு காணலாம்.

சோடா உப்பு :

சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பினை நீருடன் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். அதனை பருக்கள் உள்ள இடத்தில் தடவி , 10-15 நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு வெது வெதுப்பான நீரினில் கழுவவும். இதுபோல் தினமும் செய்துவந்தால், பருக்கள் இருந்த இடம் மாயமாகும்.

Effective methods for butt acne

லேக்டிக் அமிலம் கொண்ட லோஷன் :

லாக்டிக் அமிலம் கொண்ட லோஷன்கள் இறந்த செல்களை வேகமாக அகற்றிவிடும். ஆகவே தினமும் இரு வேளை அதனை தடவி வந்தால் , நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு புட்டத்தில் வரும் பருக்களுக்கு நல்ல தீர்வாகும். எலுமிச்சை சாற்றினை போட்டால் எரிந்து புண்ணாகுமே என்ற கவலை வேண்டாம். அந்த இடத்தில் தோல் தடிமனாக இருப்பதால் ,எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. அது மேலும் பருக்கள் வராமல் தடுக்கும். அதுமட்டுமிலாமல், பருக்களினால் வரும் தழும்புகளையும் அகற்றும்.

Effective methods for butt acne

பூண்டுச் சாறு :

பூண்டுச் சாற்றினை அப்படியே உபயோகப்படுத்தக் கூடாது. அதனை நீருடன் கலந்து உபயோகிக்கவும்.இது பருக்களை மேலும் பெருகச் செய்யாமல் தடுக்கும் ஆற்றலுடையது.

சுத்தமாக இருத்தல் :

புட்டத்தில் பருக்கள் வர சுத்தமின்மையும் காரணம். வியர்வை அதிகம் வந்தால், அல்லது காற்று பூகாத உள்ளாடை அணிந்தாலும் வரும். மேலும் சுத்தமான பருத்தி உள்ளாடைகள் அணிவது நலம்.

தேன் :

தேனில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அது பருக்களை விரைவாக குணப்படுத்தி சருமத் தடிப்பினைக் குறைக்கும். தினமும் தேன் பூசி வந்தால் பருக்களை எளிதாய் விரட்டி விடலாம்.

Effective methods for butt acne

மஞ்சள் :

மஞ்சள் சரும பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தருகிறது. மஞ்சள் பொடியை நீருடன் சேர்த்து, பேஸ்ட் போலச் செய்து , பருக்கள் உள்ள இடத்தில் தடவி காய்ந்தபின் கழுவி விடுங்கள். தினமும் செய்து வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாது.

Effective methods for butt acne

இந்த எளிய தீர்வுகளை வீட்டில் பின்பற்றி, பருக்களை விரட்டுங்கள்.இனி கவலையை உதறுங்கள்.

English summary

Effective methods for butt acne

Acne at the back side ?no worries.. remedies are hear!! Read and get benefits
Please Wait while comments are loading...
Subscribe Newsletter