Latest Updates
-
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது!
ஆண்களே! உங்கள் முகம் ஏன் எப்போதும் பொலிவிழந்து உள்ளதென்று தெரியுமா?
ஆண்களின் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது அவர்களின் பழக்கவழக்கங்கள் தான். ஆண்கள் தங்களின் ஒருசில கெட்ட பழக்கங்களை மாற்றி, சரியான சரும பராமரிப்புக்களைப் பின்பற்றி வந்தால், தங்களின் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம்.
ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...
இங்கு ஆண்களின முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து மாற்றிக் கொள்ள வேண்டியதை மாற்றிக் கொண்டு, சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுத்து வாருங்கள். இதனால் முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம்.
ஆண்களே! ஹேண்ட்சம் பாய் போல காட்சியளிக்க சில சிம்பிளான வழிகள்!!!

புகைப்பிடித்தல்
வேலைப்பளு அதிகம் உள்ளதென்று, தங்களின் டென்சனைப் போக்குவதற்கு பல ஆண்கள் புகைப்பிடிக்கின்றனர். ஆனால் அப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் பாதிக்கப்படுவதோடு, உங்களின் சருமமும் தான் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக புகைப்பிடித்தால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். எனவே முடிந்த அளவில் சிகரெட் பிடிப்பதை விரைவில் நிறுத்திக் கொண்டு, மன அழுத்தத்தைப் போக்க வேறு வழிகளைத் தேடுங்கள்.

மது அருந்துதல்
ஆண்களிடம் உள்ள கெட்ட பழக்கங்களில் மற்றொன்று தான் மது அருந்துவது. மதுவை அளவுக்கு அதிகமாக அருந்துவதால், தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதோடு, சருமமும் பாதிக்கப்படும்.

வெயிலில் சுற்றுவது
ஆண்கள் வெயிலில் அதிகம் சுற்றுவார்கள். அப்படி சுற்றும் போது சூரியக்கதிர்களின் தாக்கம் சரும செல்களின் மீது அதிகம் இருப்பதால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு, அதனால் சரும சுருக்கம், கருமையான சருமம் போன்றவை ஏற்படுகிறது. எனவே எப்போதும் வெயிலில் செல்லும் முன்னும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.

லேட் நைட்
அலுவலகத்தில் இருந்து தாமதமாக வீட்டிற்கு செல்வது அல்லது நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதால், போதிய தூக்கம் கிடைக்காமல், அதனால் முகத்தின் பொலிவு பாதிக்கப்படுகிறது. எனவே தினமும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தத்துடன் இருந்தால், சரும செல்கள் தங்களைத் தாங்களே சரிசெய்து கொள்ள முடியாமல் போகும். அதனால் தான் மன அழுத்தத்துடன் இருக்கும் ஆண்களின் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே மன அழுத்தத்தைப் போக்குவதற்கு அன்றாடம் தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

சரும பராமரிப்பு இல்லை
100 சதவீத ஆண்களில் 30 சதவீத ஆண்களே தங்களின் சருமத்தின் மேல் அக்கறைக் கொண்டு சரியான பராமரிப்புக்களை மேற்கொள்கின்றனர். இதர ஆண்கள் தங்களின் சருமத்தற்கு எந்த ஒரு க்ரீம்மையும் பயன்படுத்துவதில்லை. இப்படி இருப்பது நல்லது தான். ஆனால் இன்றைய காலத்தில் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் கட்டாயம் தேவைப்படுகிறது. எனவே சரும செல்களுக்கு பாதுகாப்பு தரும் க்ரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
