Latest Updates
-
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்..
சரும பிரச்சனைகளும்... அதற்கான இயற்கை தீர்வுகளும்...
பிரச்சனை இல்லாம சருமம் யாருக்கு தான் உள்ளது. எல்லோருக்குமே சருமத்தில் ஒருசில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது, கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது மற்றும் இதுப்போன்ற பல உள்ளன.
இப்படி சரும பிரச்சனைகள் வருவதற்கு ஒருபக்கம் க்ரீம்கள் காரணமாக இருக்க, அந்த பிரச்சனைகளைப் போக்க உதவும் க்ரீம்களை வாங்கி போட்டால், அது எந்த பயனும் தராமல் அப்படியே இருக்கும். ஆகவே சருமத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும், உடனே அதனை சரிசெய்வதற்கான இயற்கை வழிகளை தேட வேண்டுமே தவிர, க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது.
சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்!!!
இங்கு சருமத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளையும், அதற்கான இயற்கை தீர்வுகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அதனை முயற்சித்துப் பாருங்கள்.

சருமம் வறட்சியடைந்து தோலுரிவது
உங்கள் சருமம் வறட்சியால் தோலுரிய ஆரம்பித்தால், தினமும் சருமத்திற்கு பால் தடவி மசாஜ் செய்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, சருமம் பொலிவோடு இருக்கும்.

கருவளையம்
தற்போது பலருக்கு கருவளையம் இருக்கிறது. அத்தகைய கருவளையத்தைப் போக்க தினமும் வெள்ளரிக்காயை அல்லது குளிர்ச்சியான டீ பேக்கை கண்களில் வைத்து எடுத்தால் போக்கிவிடலாம்.

சோர்வான, வீக்கமடைந்த கண்கள்
நீண்ட நேரம் கம்ப்யூட்டரின் முன்பு உட்கார்ந்து கண்கள் சோர்வுடன் காணப்படுகிறதா? அப்படியானால் க்ரீன் டீ பேக்கை கண்களின் மேல் 10-15 நிமிடம் வைத்து வந்தால், சோர்வு மற்றும் கண்களில் உள்ள வீக்கம் குறைந்துவிடும்.

வறட்சியான உதடுகள்
பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உதடுகள் வறட்சியடைவது. உதடுகள் வறட்சி அடைய காலநிலை மாற்றம், உதடுகளை கடிப்பது, அடிக்கடி எச்சில் வைப்பது, லிப்ஸ்டிக் போடுவது என்று பல காரணங்கள் இருந்தாலும், தினமும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை உதடுகளில் தடவி தூங்க வேண்டும். மேலும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

முகப்பரு
இளம் வயதினர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் முகப்பரு. இத்தகைய முகப்பருவை கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றைப் பயன்படுத்தி போக்கலாம்.

பழுப்பு நிற சருமம்
கோடையில் சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே இத்தகைய சரும நிற மாற்றத்தை தடுக்க ஆரஞ்சு பழச்சாறு, பால், தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கொண்டு போக்கலாம்.

கருமையான தழும்புகள்
முகத்தில் கருமையான தழும்புகள் இருந்தால், அவை அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே இத்தகைய கருமையான தழும்புகளைப் போக்க எலுமிச்சை சாறு மற்றும் சந்தனப் பொடி ஆகியவற்றுடன், தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், விரைவில் போக்கலாம்.

கரும்புள்ளிகள்
தேன், எலுமிச்சை சாறு, ஓட்ஸ், முட்டை, ஜாதிக்காய் பொடி ஆகியவை கரும்புள்ளிகளைப் போக்கக்கூடியவை. அதற்கு இந்த பொருட்களைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்து வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வெள்ளை திட்டுக்கள்
சிலருக்கு சருமத்தில் வெள்ளை திட்டுக்கள் இருக்கும். இவை பொலிவற்ற தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே அதனை தடுக்க பால் மற்றும் மில்க் க்ரீம் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமானால் தேன் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்தும் வெள்ளை திட்டுக்களைப் போக்கலாம்.

எண்ணெய் பசை சருமம்
நிறைய மக்கள் எண்ணெய் பசை சருமத்தினால் அதிக பிரச்சனைக்கு உள்ளாவார்கள். அத்தகையவர்கள் சருமத்திற்கு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் சாற்றினைப் பயன்படுத்தி, சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கிவிடும்.



Click it and Unblock the Notifications
