Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
போர் தண்ணீல குளிக்குறீங்களா? சருமத்துல நிறைய பிரச்சனை வருமாம்!!!
சில சமயங்களில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு காரணமே தெரியாது. அவ்வாறு சருமத்தில் வறட்சி ஏற்பட்டால், அவற்றை போக்குவதற்கு மார்கெட்டில் விற்கும் பல க்ரீம்களை பயன்படுத்துவோம். இருப்பினும் அவற்றை பயன்படுத்தியப் பின்பும், வறட்சி ஏற்பட்டால், உடனே மாய்ச்சுரைசர் க்ரீம் சரியில்லை என்று அதனை மாற்ற நினைப்போம்.
ஆனால் அவ்வாறு மாற்றுவதற்கு முன்னர் அனைவரும் சிந்திக்க வேண்டியது, உபயோகப்படுத்தும் நீரைத் தான். ஆம், தற்போது பெரும்பாலான வீடுகளில் போர் அல்லது கார்ப்ரேஷன் தண்ணீரைத் தான் பயன்படுத்துகிறோம். அத்தகைய தண்ணீரில் அதிகமான அளவில் கனிமங்களான கால்சியம் கார்போனேட் மற்றும் டோலோமைட் போன்றவை இருக்கும். குறிப்பாக போர் தண்ணீரில் தான், இவை அதிகம் இருக்கும். ஆகவே இத்தகைய பொருட்கள் நிறைந்த தண்ணீரை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்துவதால், சருமத்தில் எதிர்பாராத பல சரும பிரச்சனைகள் ஏற்படும்.
அத்தகைய பிரச்சனைகளை சொன்னால் நம்பமாட்டீர்கள். இருப்பினும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே அந்த சரும பிரச்சனைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சரும செல்களை பாதித்தல்
போர் அல்லது கார்ப்ரேஷன் நீரில் குளித்தால், ஆரோக்கியமாக இருக்கும் சரும செல்கள் பாதிக்கப்படும். மேலும் சரும செல்களில் உள்ள எலாஸ்டின் மற்றும் கொலாஜன் போன்றவை நீரில் உள்ள ஜிங்க், மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவற்றால் உடைக்கப்படும்.

பருக்கள்
நீரில் உள்ள கனிமங்கள் முகப்பருக்களை உண்டாக்கும். அதிலும் இதனால் உண்டாகும் வறட்சி, சருமத்தில் உள்ள முகப்பருக்களை உடைத்து, அவை பரவ செய்யும்.

சரும வறட்சி
முக்கியமாக போர் நீர், சருமத்திற்கு வறட்சியை உண்டாக்கும். மேலும் வறட்சியை உண்டாக்கி, சருமத்தில் அரிப்புக்களை ஏற்படுத்தி, சில சமயங்களில் வறட்சியால் காயங்கள் மற்றும் வெடிப்புக்களையும் உண்டாக்கும்.

தொற்றுநோய்கள்
கனிமங்கள் அதிகம் இருக்கும் நீரை சருமத்தில் பயன்படுத்தும் போது, அவை சருமத்தில் ஒரு மென்படலத்தை உண்டாக்கி, சருமத்தில் இருந்து வெளிப்படும் இயற்கை எண்ணெய் சருமத்தின் மேல்பகுதியை அடையச் செய்யாமல் தடுக்கும். இதனால் சருமத்தில் எளிதில் நோய்க்கிருமிகள் தாக்கும்.

பிம்பிள்
முகத்திற்கு சோப்பு போட்டு, அதனை கனிமங்கள் அதிகம் நிறைந்த நீரால் கழுவினால், அவை முற்றிலும் சருமத்தில் இருந்து வெளியேறாமல் செய்துவிடும். மேலும் அவை சருமத்துளைகளில் உள்ள எண்ணெய்களில் அழுக்குகளை தங்கச் செய்து அடைத்து, இறுதியில் பிம்பிளை உண்டாக்கும். எனவே பிம்பிள் வந்தால், அப்போது அதனை போக்குவதற்கு இயற்கை முறையை முயற்சிப்பதற்கு முன், எந்த நீரை பயன்படுத்துகிறோம் என்பதை கவனிக்கவும்.

சரும அழற்சி (சிரங்கு)
போர் நீரைப் பயன்படுத்துவதால், சருமத்தின் மேல்பகுதியில் ஒருவித அழற்சி ஏற்படும். இத்தகைய அழற்சி ஏற்பட்டால், சரும வறட்சி, சரும நிற மாற்றம் மற்றும் அரிப்பு போன்றவை இருக்கும். அதிலும் தொடர்ந்து அந்த நீரில் குளித்தால், நிச்சயம் உண்டாகும்.

அரிப்பு
குளிக்கும் போது கனிமங்கள் அதிகம் உள்ள நீரைப் பயன்படுத்தினால், அது சருமத்தில் உள்ள சோப்பை முற்றிலும் போக்காமல், சருமத்தில் வறட்சியுடன், ஆங்காங்கு சொறி போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்.

சுருக்கங்கள்
கனிமங்கள் அதிகம் நிறைந்த நீரைப் பயன்படுத்தும் போது, அவை சருமத்தில் உள்ள செல்களை பாதித்து, கொலாஜனை உடைக்கும் போது, இறுதியில் சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கி, இளமையிலேயே முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும்.



Click it and Unblock the Notifications
