Latest Updates
-
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம்
சருமம் வெள்ளையாக வேண்டுமா? அப்ப ப்ளீச்சிங் செய்யுங்க...
பளிங்கு போன்ற பளபளப்பான அழகிய முகத்தையே அனைவரும் விரும்புவர். மாசு மருவற்ற சருமமே பளிங்கு போல மின்னும். ஆயினும், சூரியக்கதிர், மாசுபட்ட காற்று மற்றும் வயது ஆகியவை கரும்புள்ளி மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தி, சரும அழகை கெடுக்கும். ஆனால் அனைவரும் கரும்புள்ளி மற்றும் சுருக்கம் இல்லாத மென்மையான பளபளப்பான சருமம் வேண்டும் என்றே விரும்புவோம்.
ஆகவே இத்தகைய மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை பிளீச்சிங் செய்வதன் மூலம் பெறலாம். இருப்பினும், பிளீச்சிங் செய்வதில், எந்த முறை ப்ளீச்சிங்கை செய்வது என்பதை தேர்வு செய்வதே மிக முக்கியம். மேலும் எந்த முறை ப்ளீச்சிங் செய்யலாம் என்று தேர்வு செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் அதில் வகைகள் உள்ளன. இங்கு ப்ளீச்சிங் பற்றியும், இயற்கையான ப்ளீச்சிங் முறைகளைப் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, ப்ளீச்சிங்கை மேற்கொள்ளுங்கள்.

ப்ளீச்சிங் வகைகள்
பவுடர் ப்ளீச் (Powdered bleach)
இந்த வகை ப்ளீச்சிங்கில், ப்ளீச்சிங் பவுடருடன் ஹைட்ரஜன் பெராக்சைடு (Liquid Hydrogen Peroxide) மற்றும் அம்மோனியா (Ammonia) சேர்த்து செய்யப்படும்.
க்ரீம் ப்ளீச் (Cream bleach)
இவ்வகை ப்ளீச்சிங்குகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும் மற்றும் இது பொதுவாக அழகு நிலையங்களில் செய்யப்படும்.

ப்ளீச்சிங் செய்வதற்கான காரணங்கள்
* கரும்புள்ளி மற்றும் சுருக்கங்கள் இருப்பின், அப்போது ப்ளீச்சிங் முறையை கரும்புள்ளி மற்றும் சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் தடவ வேண்டும். அதிலும் இதற்கு பவுடர் ப்ளீச்சை பயன்படுத்த வேண்டும்.
* கருமையான சருமம் இருந்தால், அதனை வெள்ளையாக்குவதற்கு பிளீச் க்ரீம் ப்ளீச் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அப்போது தான் அதை முகம் முழுவதுமாக தடவ முடியும்.
* ஒருவேளை ப்ளீச் செய்யவதற்கென்று குறிப்பட்ட பகுதி இல்லையென்றால் (கரும்புள்ளி மற்றும் சுருக்கங்கள் வெகுவாக பரவி இருந்தால்), க்ரீம் ப்ளீச் பயன்படுத்துவதே சிறந்தது.
* ப்ளீச்சிங்கை வெகு நாட்களுக்கு செய்யக்கூடாது, விரும்பியவாறு தோற்றம் அடைந்தவுடன் ப்ளீச் செய்வதை நிறுத்தி விட வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். மேலும் இரசாயன கலவைகளை விட, வீட்டிலே செய்யப்படும் ப்ளீச்சிங் தான் சிறந்தது.

எலுமிச்சை மற்றும் தேன் ப்ளீச்சிங்
தேவையானவை:
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
க்ரீம் - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
மேலே கூறப்பட்ட அனைத்தையும் கலந்து, முகத்தில் தடவி ஊற விட்டு, உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும்.

மஞ்சள் ப்ளீச்சிங்
தேவையானவை:
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - சில துளிகள்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்
செய்முறை:
மேலே சொல்லப்பட்ட பொருட்களை ஒன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும்.

பால் ப்ளீச்சிங்
தேவையானவை:
பால்- 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
செய்முறை:
மேற்கூறிய இரண்டையும் நன்றாக கலந்து, பசை போலாக்கி, அதை முகத்தில் தடவி உலர விட்டு, வெதுவெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.

சந்தன ப்ளீச்சிங்
தேவையானவை:
சந்தனம் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு- 1 டீஸ்பூன்
செய்முறை:
மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். கலவை உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.

குறிப்பு
மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு முறையை வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் வெள்ளையாகவும், பளபளப்பாகவும் மின்னும். அழகு நிலையங்களுக்கு செல்வதை காட்டிலும், வீட்டிலே செய்யப்படும் இத்தகைய ப்ளீச்சிங் நல்ல பலனை தரும்.



Click it and Unblock the Notifications