Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆண்களுக்கான மிகச்சிறந்த ஆஃப்டர் ஷேவ் ஆயில்கள்!!!
சந்தைகளில் விற்கப்படும் ஆஃப்டர் ஷேவ் லோஷன்கள் மற்றும் ஆயில்கள் சில ஆண்களுக்கு அரிப்பையும், அலர்ஜியையும் உருவாக்குவதாக இருக்கும். இவ்வாறு கடைகளில் கிடைக்கும் ஆஃப்டர் ஷேவ் ஆயில்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதை விட, உள்ளூரில் உங்களின் கைகளுக்கு எட்டும் தொலைவில் கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யக் கூடிய, அலர்ஜிகளை ஏற்படுத்தாத ஆஃப்டர் ஷேவ் ஆயில்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆல்கஹால் பயன்படுத்தி செய்யப்படும் சில ஆஃப்டர் ஷேவ் ஆயில்கள் தோலின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, ஷேவிங் செய்யும் போது பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்கு ஒரு தீர்வாக வீடுகளில் செய்யப்பட்ட ஆஃப்டர் ஷேவ் ஆயில் அல்லது ஷேவிங்கிற்குப் பின்னர் தோலை குளுமைப்படுத்தும் பார் கட்டியையோ தேர்ந்தெடுக்கலாம். வீடுகளில் ஆஃப்டர் ஷேவ் ஆயில்களை தயாரிக்கும் போது, நீங்கள் அதில் உயிர் மற்றும் மூலிகை பொருட்களை சேர்த்து அலர்ஜி மற்றும் ஷேவிங் தொடர்பான தொற்றுகளை தவிர்க்கலாம். கற்றாழை, தேநீர் மர எண்ணைய், ஆலிவ் எண்ணெய், பே ரம், வெள்ளரிக்காய், வோட்கா ஆகியவை வீடுகளில் ஆஃப்டர் ஷேவ் ஆயில்களை தயாரிக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுடைய தோலுக்கு ஏற்ற வகையிலான சிறந்த ஆஃப்டர் ஷேவ் ஆயிலை நீங்கள் தேர்ந்தெடுத்த பின்னர், நீங்கள் அதனை சந்தைகளில் ஸ்ப்ரே பாட்டில், குளிர்பதனப் பெட்டிகளில் வைத்தோ, காற்றுப்புகாத வைப்பறைகளில் வைத்தோ அல்லது கட்டியாக குளுமையான இடத்தில் வைத்தோ அதனை பயன்படுத்தலாம். வணிக ரீதியிலான இடுபொருட்கள் இல்லாததால், வீடுகளில் செய்யப்படும் உயிரக ஆஃப்டர் ஷேவ் ஆயில்கள் நெடுநாட்களுக்கு வருவதில்லை. எனவே அதற்கேற்றவாறு இவற்றை பயன்படுத்துவதும் மற்றும் எச்சரிக்கையுடன் பாதுகாத்து வைப்பதும் அல்லது குளிர்பதன பெட்டிகளில் வைப்பதும், ஆஃப்டர் ஷேவ் ஆயில்கள் தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்க உதவும்.
இங்கே சில பிரபலமான ஆஃப்டர் ஷேவ் ஆயில்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

கற்றாழை
இயற்கையில் அதிசய மருத்துவ தாவரமான இதில் புத்தாக்கம், குணப்படுத்துதல் மற்றும் இணக்கம் செய்தலுக்குண்டாக தன்மைகள் உள்ளன. நீங்கள் ரேஸரில் ஷேவ் செய்யும் தோலின் மேல், இதன் இலைகளுக்குள் இருக்கும் ஜெல்லி போன்ற கூழை அப்படியே பயன்படுத்தலாம். அது எந்தவிதமான ரேஸர் காயங்கள் மற்றும் வெட்டுக்களையும் குணப்படுத்தவும் மற்றும் தோலை பதப்படுத்தவும் செய்கிறது.

தேநீர் மர ஆயில் (Tea Tree Oil)
தேநீர் மர ஆயில் மற்றும் லேவெண்டர் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலக்கிய கலவையை தயார் செய்யவும். நீங்கள லேவெண்டர் ஆயிலுக்குப் பதிலாக பிற நறுமணமூட்டும் எண்ணைய்களையும் பயன்படுத்தலாம். பின்னர் இதனை ரேசர் வெட்டுகள் மற்றும் குளிர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.

விட்ச் ஹேஸல் செடியின் சாறு
விட்ச் ஹேஸல் செடியின் சாற்றுடன் தண்ணீர்; மற்றும் சில துளிகள் ஆலிவ் எண்ணையை கலக்கவும். அதனுடன், லேவெண்டர், ரோஸ்மேரி போன்ற நறுமண மூலிகைகளை அதனுடன் சேர்த்து, இந்த கலவையை இலவங்கப்பட்டையுடன் சேர்த்து ஒரு ஜாடிக்கு மாற்றவும். இந்த கலவை சாற்றை 2-3 வாரங்களுக்கு வைத்திருந்து, அதன் காய்ந்த சாற்றை ஆஃப்டர் ஷேவ் ஆயிலாக பயன்படுத்தவும்.

பே ரம்
ஆரஞ்சு பழச்சாற்றுடன் பே ரம், இலவங்கம், கிராம்பு மற்றும் சிறதளவு வோட்காவுடன் கலக்கவும். அதனை இருட்டான மற்றும் குளிர்ந்த இடத்தில் 2 வாரத்திற்கு வைக்கவும். ஆதன் பின்னர், இந்த கலவையை பலமான கலக்கி, மூன்று-நான்கு முறை வடிகட்டி, கடைசியாக வடிகட்டிய சாறு தெளிவாக இருக்கும் வரையில் வடிகட்டுங்கள். இதனை ஒரு ஜாடியில் வைத்து ஆஃப்டர் ஷேவ் ஆயிலாக பயன்படுத்தலாம்.

ஷியா வெண்ணெய்
தந்தத்தின் நிறமுடைய இந்த சாற்றினை ஆப்ரிக்க வகை ஷியா மரத்தில்ருந்து எடுத்து, அதன் உண்மையான வடிவத்திலேயே ஆஃப்டர் ஷேவ் ஆக பயன்படுத்தலாம். நீங்கள் இதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்து கடினப்படுத்தவும் மற்றும் சவரம் செய்யப்பட்ட தோலின் மேல் தேய்க்கும் குளுமைப் படுத்தும் கட்டியாகவும் பயன்படுத்தி, உங்களுடைய தோலுக்கு புத்துணர்வையும், குணப்படுத்தவும் செய்யலாம். இது இயற்கையாகவே ஆண்தன்மை கொண்ட வாசனையுடன் இருக்கும்.

ஆப்பிள் வினிகர் சாறு
இது புகழ் பெற்ற ஆஃப்டர் ஷேவ் ஆயில்களில் ஒன்றாகும். அது அதன் உண்மை வடிவத்திலேயே தோலின் மேல் நேரடியாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். அதனை மேலும் வாசனையுடையதாகவும், திறன் கொண்டதாகவும் செய்ய, நீங்கள் ஆப்பிள் வினிகர் சாற்றுடன் இலவங்க குச்சிகள், கிராம்புகள் மற்றும் பே இலைகளை சேர்த்து காரத்தை உருவாக்கி, அதனை ஒரு உறுதியான ஆஃப்டர் ஷேவ் ஆயிலாக பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் ஆஃப்டர் ஷேவ்
வெள்ளரிக்காய், புதினா சாறு மற்றும் தண்ணீரை கொண்டு உருவாக்கப்படும் மிகவும் எளிமையான ஆஃப்டர் ஷேவ் ஆயிலாக இது வெள்ளரிக்காய் ஆஃப்டர் ஷேவ் உள்ளது. ½ கப் குக்கும்பரை, ¼ கப் புதினா சாறு மற்றும் 1 கப் தண்ணீருடன் சேர்த்து வேகமாக அரைக்கவும். பலமாக அதனை குலுக்கி, அந்த சாற்றினை குளிர்பதனப் பெட்டியில் வைத்து ஆஃப்டர் ஷேவ் ஆயிலாக பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
