Latest Updates
-
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!
கோடையில் உடலிலும், சருமத்திலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதிலும் வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்து வேலை செய்வோரைப் பார்த்தால், கருப்பாக இருப்பார்கள். ஏனெனில் தற்போது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தின் மீது தொடர்ந்து படுவதால், சரும செல்கள் பாதிப்படைந்து, சருமத்தின் நிறமே மாறிவிடுகிறது.
எனவே எப்போது வெளியே சென்று வீட்டிற்கு வந்தாலும், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், புறஊதாக்கதிர்களால் பாதிப்படைந்த செல்கள் தொடர்ச்சியாக வெயிலால் பாதிக்கப்பட்டால், நாளடைவில் சரும புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூரியனின் தாக்கத்தினால், சருமம் பொலிவிழந்து, அசிங்கமான தோற்றத்தையும் கொடுக்கும்.
ஆகவே வெயிலில் சுற்றி வீட்டிற்கு வந்ததும், பாட்டிகளிடம் இருந்து சுட்ட சில அழகுப் பராமரிப்புக்களை மேற்கொண்டால், இழந்த சருமத்தின் நிறத்தை மீண்டும் பெறுவதோடு, சருமம் பொலிவோடு அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சில ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போம்.

வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் ஜூஸில், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் இதில் உள்ள எலுமிச்சை நிறமாறிய சருமத்தை பழைய நிலைக்கு மாற்றவும், வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கவும் உதவும்.

தேன்
2 டேபிள் ஸ்பூன் தேனில், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 1-2 முறை செய்வது நல்லது.

மஞ்சள் தூள்
மஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது காய்ச்சாத பாலை ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ்
ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது மோர் சேர்த்து, நன்கு கலந்து, முகம் மற்றும் நிறம் மாறிய இடங்களில் தடவி, ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

தயிர்
அக்காலத்தில் எல்லாம் கடலை மாவில், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், இழந்த அழகை மீண்டும் பெறலாம்.

எலுமிச்சை சாறு
தினமும் எலுமிச்சை சாற்றினை முழங்கை, முழங்கால் மற்றும் மற்றும் கருப்பாக காணப்படும் இடங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவினால், கருமையை போக்கி, சருமத்தை மென்மையோடு வைக்கலாம்.

இளநீர்/தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீர் அல்லது இளநீரை, ஒரு நாளைக்கு இரண்டு முறை சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.

பால் பவுடர்
சம பங்கு அளவில் பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலந்து, நிறம் மாறிய இடங்களில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த கலவையை ஒரு வாரத்திற்கு வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வந்தால், நல்லப் பலனைப் பெறலாம்.

சர்க்கரை
சர்க்கரை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே சர்க்கரையில், சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்கள், அத்துடன் கிளிசரினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications