Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..?

கிளின்சர் : முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.
தண்ணீர் : எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
ஃபேஸ் வாஷ் : இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. அவ்வாறு கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ் வாங்கும் போது ஆல்கலைன் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டாம். மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.
ஃபேசியல் ஸ்கரப் : முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மையாக 3-4 நிமிடங்களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும்.
இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications