Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
பளபளப்பான முகத்திற்கு ஏற்ற பருவக்கால 'ப்ரூட் ஸ்கரப்'ஸ்...

பளபளப்பான முகத்தைப் பெற...
ஸ்ட்ராபெர்ரி : கண்ணை பறிக்கும் நிறத்தையும், அழகான வடிவத்தையும், சதை மிகுந்த பகுதியையும் உடைய ஸ்ட்ராபெர்ரி, முகத்திற்கு ஸ்கரப் செய்வதற்கு மிகவும் ஏற்ற பழம். இத்தகைய பழத்தை வாங்கி சாப்பிடும் போது, அதிகம் கனிந்த பழங்களை தூக்கிப் போடாமல், அவற்றை முகத்திற்கு அழகுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
அதற்கு அந்த கனிந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு மசித்துக் கொண்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். இது சருமத்தில் சற்று எண்ணெயை தக்க வைக்கிறது. சாதாரணமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு அரைத்து, அத்துடன் சிறிது சர்க்கரையை சேர்த்து , முகத்தில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவிட வேண்டும்.
வாழைப்பழம் : சரும பராமரிப்பிற்கு ஏற்ற பழம் என்றால் அது வாழைப்பழம் தான். இதன் கனிந்த பழத்தை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், பழத்தின் அனைத்து சத்துக்களும் முகத்திற்கு அப்படியே போகும். மேலும் அதனால் சருமமானது சற்று இறுக்கமடைவதுடன், தேவையற்ற இறந்த செல்களையும் எளிதில் நீக்கிவிடும். அதற்கு வாழைப்பழத்தை நன்கு அரைத்து அதில் சிறிது வெண்ணிலா சாற்றை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு முகத்திற்கு தடவி, 3 நிமிடம் ஊற வைத்து, பின்பு கழுவவும். இதனால் முகமானது பளிச்சென்று ஆவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.
பப்பாளி : பப்பாளிப் பழத்தில் இருக்கும் பாபெயின் என்னும் நொதிப்பொருள், சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தையும் மென்மையாக்கும். மேலும் அதில் செய்யப்படும் ஃபேசியல் ஸ்கரப் தோலின் துளைகளில் இருக்கும் அழுக்கு, தூசிகளை நீக்குவதோடு, சருமடத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இல்லாமலும் பார்த்துக் கொள்ளும். ஆகவே அதற்கு பப்பாளியை நன்கு அரைத்துக் கொண்டு, சிறிது ஓட்ஸ் மீல், சர்க்கரை சேர்த்து, நன்கு சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்திற்கு தடவி, 1 நிமிடம் நன்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை பால் அல்லது நீரில் கழுவ வேண்டும்.
பீச் : பீச் பழத்தை நன்கு அரைத்துக் கொண்டு, அதில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு கழுவ வேண்டும். இதனால் சருமமானது நன்கு இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடனும் இருக்கும். மேலும் இதனால் செய்யப்படும் கிரீமைப் பயன்படுத்தினால் முகமானது சிகப்பாகவும் மாறும். அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை பேஸ் செய்து, அதோடு பால் சேர்த்து முகத்திற்கு தடவி, 2 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், முகமானது நல்ல நிறத்தையும் பெறும்.
ஆகவே வீட்டில் சாப்பிட வாங்கும் பழங்களை தூக்கிப் போடாமல், அதனை ஸ்கரப் போல் செய்து சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தினால் முகமானது அழகாக இருப்பதோடு, பளபளப்போடும், சருமத்திற்கு தேவையான ஈரப்பசையுடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
