உங்க கை கருப்பா இருக்கா? ஒரே வாரத்தில் உங்க கைகள் வெள்ளையாகணுமா? அப்ப இந்த மாதிரி செய்யுங்க...

Skin Care Tips In Tamil: அழகாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் போது முகம் மட்டும் நன்கு அழகாக வெள்ளையா இருந்து, கைகள் கருப்பாக இருந்தால் நன்றாக இருக்குமா? உங்கள் நிலையும் இதுதானா? அப்படியென்றால் கருப்பாக இருக்கும் உங்கள் கைகளை வெள்ளையாக்கும் சில இயற்கை வழிகள் உள்ளன.

அதுவும் கைகளில் இருக்கும் கருமையைப் போக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். அது அந்த இயற்கை பொருட்களைக் கொண்டு கைகளுக்கு பராமரிப்புக்களைக் கொடுப்பது.

Skin Care Tiips: Top Ten Ways To Whiten Your Hands Instantly In Tamil

உடலிலேயே முகத்திற்கு அடுத்தப்படியாக சூரிய ஒளிபடும் பகுதி என்றால் அது கைகள் தான். வெளியே வெயிலில் சுற்றும் போது, கைகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்காமல் இருந்தால், கைகள் விரைவில் கருமையாகிவிடும்.

உங்கள் கைகளை வெள்ளையாக்க வேண்டுமா? அப்படியானால் கீழே கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை பின்பற்றினால் நிச்சயம் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

1. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றில் கேடகோலேஸ் அதிகம் உள்ளன. இது சருமத்தில் வளரும் முடியின் நிறத்தை மங்கச் செய்துவிடும்.

எனவே நீங்கள் உங்கள் கைகளை வெள்ளையாக்க விரும்பினால், உருளைக்கிழங்கை துருவி, அதன் சாற்றினை கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் கைகளைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. ஆரஞ்சு தோல் ஸ்க்ரப்

ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை உடனடியாக அதிகரிக்கும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால், இது ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து, சருமத்தை நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து, தேன் சேர்த்து கலந்து, அதை கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தேய்த்து கழுவ வேண்டும்.

3. பாதாம் பேஸ்ட்

சிறிது பாதாமை எடுத்து பாலில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில், அந்த பாதாமை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தை மென்மையாகவும், பளிச்சென்றும் மாற்றும்.

4. புதினா

புதினாவில் குளிர்ச்சி பண்புகள் உள்ளன மற்றும் இது கரும்புள்ளிகள், பிம்பிள் மற்றும் சரும கருமையைப் போக்க உதவி புரியும். அதற்கு சிறிது புதினா இலைகளை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

5. எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளன. இவை இரண்டும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவி புரியக்கூடியவை. அதுவும் எலுமிச்சையை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், விரைவில் சருமத்தில் உள்ள கருமை நீங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீருடன் சேர்த்து கலந்து, கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

6. பால்

பாலில் லாக்டிக் அமிம் உள்ளன. இது சருமத்தில் உள்ள கருமை, சரும வறட்சி போன்றவற்றைக் குறைக்கும். அதற்கு காய்ச்சாத பச்சை பாலை கைகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்கி, கைகள் விரைவில் வெள்ளையாகும்.

7. சந்தன பவுடர் மற்றும் தக்காளி ஜூஸ்

சந்தனம் குளிர்ச்சிப் பண்புகளைக் கொண்டது. அதேப் போல் தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. எனவே சந்தன பவுடருடன் தக்காளி சாற்றினை சேத்து கலந்து, கைகளில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், கைகள் பளிச்சென்று வெள்ளையாகும்.

8. கடலை மாவு மற்றும் தயிர்

பாரம்பரியமாக சரும நிறத்தை அதிகரிக்கவும், சரும அழகை மேம்படுத்தவும் கடலை மாவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேப் போல் தயிரும் சரும அழகை மேம்படுத்த பெரிதும் உதவி புரியக்கூடியது. அப்படிப்பட்ட கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி தேய்த்து கழுவும் போது, கைகளில் உள்ள கருமை நீங்கி, கைகள் பளிச்சென்று பிரகாசிக்கும்.

9. பால், தேன் மற்றும் மஞ்சள்

பால், தேன், மஞ்சள் ஆகிய மூன்று பொருட்களுமே அழகு பராமரிப்பில் முக்கியமான பொருட்களாகும். குறிப்பாக இவை மூன்றிற்கும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் சக்தி உள்ளன. எனவே இந்த முன்றையும் ஒன்றாக கலந்து கைகளில் தடவி நன்கு காய வைத்து கழுவி வந்தால், கருப்பாக இருக்கும் கைகள் வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.

10. போராக்ஸ் பவுடர், ரோஸ் வாட்டர், கிளிசரின்

போராக்ஸ் பவுடர் சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும், கிளிசரின் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் மற்றும் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு பொலிவைத் தரும். எனவே உங்கள் கைகள் கருப்பாக அசிங்கமாக இருந்தால், அதை வெள்ளையாக்க ஒரு பௌலில் 3 ஸ்பூன் போராக்ஸ் பவுடர், 2 ஸ்பூன் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீராக கழுவ வேண்டும்.

Desktop Bottom Promotion