Latest Updates
-
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
முகம் கருப்பா பொலிவிழந்து இருக்கா? அப்ப முட்டை வெள்ளைக்கரு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க...
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலரும் தங்கள் சரும அழகை மேம்படுத்த கடைகளில் விற்கப்படும் பலவிதமான சரும பராமரிப்பு க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுப்பதை விட இயற்கை பொருட்களால் பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீண்ட காலம் இளமையாகவும் இருக்கும்.
அப்படி சரும அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் ஒரு பொருள் தான் முட்டையின் வெள்ளைக் கரு. பல நூற்றாண்டுகளாக முட்டையின் வெள்ளைக்கரு அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக சரும சுருக்கத்தைத் தடுக்கவும், பருக்களைத் தடுக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

இந்த முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்குகள் நீங்கும், சருமத்தின் பொலிவு மேம்படும், முகம் பளிச்சென்று சுத்தமாகவும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும். இப்போது முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு எந்த சரும பிரச்சனைக்கு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்பதைக் காணலாம்.
1. முகப்பருக்கள் நீங்க...
* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, ஈரத்துணியால் முதலில் துடைத்து எடுக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, பின் காய வைக்க வேண்டும்.
* அதன் பின் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
2. முகக் கருமை நீங்க...
* முதலில் ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
* பின் சருமத்தை உலர்த்திவிட்டு, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
3. வறண்ட சருமத்திற்கு...
* அதிக சரும வறட்சியைக் கொண்டவர்கள் முதலில் ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் மசித்த அவகேடோ பழத்தை சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்த நல்ல பலனைப் பெறலாம்.
4. கரும்புள்ளிகள் நீங்க...
* கரும்புள்ளி பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வெள்ளைக் கருவை முகத்தில் ஒரு மேக்கப் பிரஷ் பயன்படுத்தி தடவ வேண்டும்.
* அதன் பின் மேலே ஒரு டிஷ்யூவை வைக்க வேண்டும்.
* பின் அந்த டிஷ்யூ மேல் மீண்டும் வெள்ளைக்கருவை தடவ வேண்டும்.
* 10 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்த பின் அதை உரித்து எடுத்துவிட்டு, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்த நல்ல பலனைப் பெறலாம்.
5. சென்சிடிவ் சருமத்தினருக்கு...
* சென்டிசிவ் சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை நன்கு கலந்து கொண்டு, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, சருமத்தை உலர்த்த வேண்டும்.
* அதன் பின் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
6. எண்ணெய் பசை சருமத்தை போக்க...
* முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த முகம் பளிச்சென்று இருக்கும்.



Click it and Unblock the Notifications
