Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
டல்லா இருக்குற முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Skin Care Tips In Tamil: தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையினால், காலையில் வேலைக்கு சென்றால் வீட்டிற்கு இரவு தாமதமாகிறது. இப்படியே வாரத்திற்கு 5-6 நாட்கள் வேலை வேலை என்று வேலையின் பின்னால் ஓடி, சிறிதும் தங்கள் சருமத்தின் மீது அக்கறை காட்ட நேரம் இல்லாமல் போகிறது.
இப்படி ஒருவர் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்காமல் இருந்தால், பின் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற பலவிதமான சரும பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடுவதோடு, முகம் பொலிவிழந்து அசிங்கமாக காட்சியளிக்கும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க முடியாவிட்டாலும், வாரத்திற்கு ஒருமுறையாவது சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் ஸ்க்ரப் போன்ற பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும்.

இப்படி பராமரிப்புக்களை கொடுப்பதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீக்கப்பட்டு, முகம் நன்கு பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது வார இறுதி அல்லது வார விடுமுறை நாட்களில் போட வேண்டிய சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில்1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் அழுக்குகள் நீங்குவதோடு, முகம் பளிச்சென்று இருக்கும்.
3. ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
4. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளியை ஒரு பௌலில் மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக நீக்கி, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.
5. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் வெள்ளரிக்காய் விழுதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வர, முகம் பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications