Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கொரிய பெண்கள் மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 நேச்சுரல் பொருட்களை தொடர்ந்து யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: நாம் அனைவருமே அழகான மற்றும் பளபளப்பான கண்ணாடி போன்ற சருமம் வேண்டுமென்று ஆசைப்படுவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் பலவிதமான அழகு சாதன பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் சமீப காலமாக பெண்கள் பலரும் கொரிய பெண்களைப் போன்ற சருமத்தைப் பெற ஆசைப்படுகிறார்கள். இதனால் கொரியன் அழகு சாதன பொருட்களான K-Beauty பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சொல்லப்போனால் இது தான் தற்போது ட்ரெண்ட்டாக உள்ளது.

ஆனால் கொரிய பெண்கள் இப்படி கண்ணாடி போன்ற சருமத்தைப் பெற காரணம், அவர்கள் இயற்கை பொருட்களை அதிகம் பயன்படுத்துவது தான். அதுமட்டுமின்றி, இவர்களின் இப்படிப்பட்ட சருமத்திற்கு மரபியலும் ஒரு காரணம்.
முக்கியமாக கொரிய பெண்களின் கண்ணாடி போன்ற சருமத்திற்கு அரிசி நீரும் ஒரு காரணம். இது தவிர இன்னும் வேறு சில பொருட்களும் கொரிய பெண்களின் கண்ணாடி போன்ற சருமத்தைப் பெற உதவுகின்றன. இப்போது அந்த பொருட்கள் எவையென்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் காண்போம்.
1. அரிசி நீர்
கொரிய பெண்களின் கண்ணாடி போன்ற சருமத்திற்கு அரிசி நீரும் ஒரு காரணம். ஏனெனில் அரிசி கழுவிய நீரில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த நீரை தினமும் சருமத்தில் பயன்படுத்தி வந்தால், அது சருமத்திற்கு பொலிவையும், பிரகாசத்தையும் தருவதோடு, சருமத் துளைகளை இறுக்கமடைய செய்து, சருமத்தின் அழகை மேம்படுத்தும். அதற்கு அரிசி கழுவிய நீரை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
2. கற்றாழை ஜெல்
நற்பதமான கற்றாழை ஜெல் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். அதுவும் இது சருமத்தை இதமாக வைத்துக் கொள்ளவும், சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சியை குறைக்கவும், சருமத்தை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன. எனவே இத்தகைய கற்றாழை ஜெல்லை தினமும் காலை, இரவு என முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி வர, சருமம் கண்ணாடி போன்று பளபளவென்று மாறும்.
3. க்ரீன் டீ
க்ரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த க்ரீன் டீயை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அது ப்ரீ ராடிக்கல்கள் மூலம் சரும செல்களுக்கு ஏற்படும் சேதம் தடுக்கப்படுவதோடு, முகப்பருக்கள் வருவதும் கட்டுப்படும். அதற்கு க்ரீன் டீயை சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. தேன்
தேன் ஒரு மிகச்சிறந்த ஈரப்பதமூட்டும் பொருள் மட்டுமின்றி, மருத்துவ குணம் அதிகம் கொண்ட பொருளும் கூட. இந்த தேனை சருமத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவும் போது, சருமம் பட்டுப் போன்று மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.
5. தயிர்
முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுவதற்கு பதிலாக, தயிரைப் பயன்படுத்தும் போது, சருமம் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் இருக்கும். அதற்கு தயிரை எடுத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை தயிரைப் பயன்படுத்தும் போது, சருமம் பளபளவென்று மாறுவதைக் காணலாம்.
எவராலும் ஓரிரு நாட்களில் கண்ணாடி போன்ற சருமத்தைப் பெற முடியாது. கண்ணாடி போன்ற சருமத்தை பெற பொறுமையும், சீரான பராமரிப்பும் அவசியம். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தினசரி சரும பராமரிப்பு சேர்த்து வந்தால், எதிர்பார்த்த கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

