Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உங்க முகம் ரொம்ப டல்லா இருக்கா? அப்ப இத தினமும் யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்களுக்கு வறண்ட சருமமா? உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படுகிறதா? பொதுவாக வறண்ட சருமத்தைக் கொண்டிருந்தால், சருமம் எண்ணெய் பசையின்றி எப்போதும் வறட்சியுடன் காணப்படும். இதன் விளைவாக சருமத்தில் அரிப்புகள் ஏற்படுவதோடு, சருமம் மென்மையிழந்து, பொலிவிழந்து அசிங்கமாக காணப்படும்.
இந்நிலையில் வறண்ட சருமத்தினர் தங்களின் சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதுவும் சருமத்திற்கு வெறுமனே ஃபேஸ் பேக்குகளை மட்டும் போடாமல், சருமத்திற்கு ஸ்க்ரப்புகள், டோனர்கள் போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டும்.

இதில் டோனர்களை எண்ணெய் பசை சருமத்தினர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் வறண்ட சருமத்தினரும் இதைப் பயன்படுத்த வேண்டும். டோனர்களானது சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும், சருமத்தின் pH அளவைப் பராமரிக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
மேலும் டோனர்கள் சருமத் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தின் அழகை மேம்படுத்தி காட்டும். அதுவும் கெமிக்கல் கலந்த டோனர்களை பயன்படுத்த விருப்பம் இல்லாவிட்டால், நம் வீட்டு சமையலறையிலேயே சில டோனர்கள் உள்ளன. இப்போது அந்த நேச்சுரல் டோனர்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. ஆப்பிள் சீடர் வினிகர்
* ஒரு பௌலில் 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, அத்துடன் 3 பங்கு நீரை சேர்த்து கலந்து, ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
* இல்லாவிட்டால் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை முகத்தில் ஸ்ப்ரே செய்து துடைக்கலாம்.
2. ரோஸ் வாட்டர்
* ஒரு பாட்டிலில் 40 மிலி ரோஸ் வாட்டரை எடுத்து, அத்துடன் 5 மிலி கிளிசரினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தினமும் காலை, இரவு நேரத்தில் முகத்தில் ஸ்ப்ரே செய்து, பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி செய்யும் போது, சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று இருக்கும்.
3. தக்காளி
* இந்த டோனருக்கு ஒரு சிறிய தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பஞ்சுருண்டையை எடுத்து அதை நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
* ஒருமுறை தயாரித்த தக்காளி டோனரை 2 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
4. க்ரீன் டீ
* இந்த டோனருக்கு 2 கப் நீரை கொதிக்க வைத்து, அந்நீரில் 3 க்ரீன் டீ பேக்கை வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த க்ரீன் டீயை நன்கு குளிர வைத்து, பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு தினமும் இதை முகத்தில் தெளித்து, துடைத்து எடுக்க வேண்டும்.
* இந்த டோனரை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். ஆனால் இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
5. பப்பாளி
* இந்த டோனருக்கு நன்கு கனிந்த பப்பாளியை எடுத்து, ஜாரில் போட்டு, 1 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தெளித்து துடைத்து எடுக்க வேண்டும்.
* ஒருமுறை தயாரித்த பப்பாளி டோனரை 4-5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











