Latest Updates
-
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும்
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப கடலை மாவை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் பொலிவிழந்து உள்ளதா? முகத்தில் பிம்பிள், கரும்புள்ளிகள் அதிகமாக உள்ளதா? இந்த சரும பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காண வேண்டுமா? அதுவும் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்காமல் இயற்கை வழியில் தீர்வு காண நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு பொருள் நல்ல தீர்வைத் தரும். அது தான் கடலை மாவு.
பழங்காலம் முதலாக அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருவது தான் கடலை மாவு. இந்த கடலை மாவு சருமத்தில் பல மாயங்களைப் புரியும் ஆற்றல் கொண்டது. சொல்லப்போனால் பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடலை மாவு பெரிதும் உதவி புரிகிறது. குறிப்பாக இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது.

இப்படிப்பட்ட கடலை மாவைக் கொண்டு பலவாறு ஃபேஸ் பேக்குகளைப் போடலாம். அதுவும் குறிப்பிட்ட சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தும் போது சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கீழே அனைத்து சருமத்தினரும் பயன்படுத்த ஏற்ற சில கடலை மாவு ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம். இப்போது சில கடலை மாவு ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. பொலிவான சருமத்திற்கு...
* பொலிவான சருமத்தைப் பெற ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பால், 2 துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20-30 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் மென்மையாக கைகளால் தேய்த்து கழுவ வேண்டும்.
2. கரும்புள்ளிகள் நீங்க..
* கரும்புள்ளிகளை அதிகமாக கொண்டவர்கள், அதை நீக்க ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, சருமத்தை உலர்த்த வேண்டும்.
* பிறகு மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
3. பிம்பிளைப் போக்க...
* முகத்தில் பிம்பிள் அதிகம் உள்ளவர்கள் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருக்காதீர்கள். இல்லாவிட்டால், சருமத்தில் சுருக்கம் வந்துவிடும்.
4. முகப்பருவை போக்க..
* முகத்தில் பருக்கள் அதிகம் வருகிறதா? அப்படியானால் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
* பின் அதை முகத்தில் தடவி காய வையுங்கள்.
* 15-20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. கருவளையங்கள் நீங்க..
* கருவளையங்களை அதிகம் கொண்டவர்கள், ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் க்ரீன் டீ பேக்கை சுடுநீரில் ஊற வைத்து, நீர் குளிர்ந்ததும், அந்த நீரை கடலை மாவுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. எண்ணெய் பசை சருமத்தினருக்கு...
* முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
7. சரும சுருக்கங்களை போக்க...
* முகத்தில் சுருக்கங்கள் அதிகம் உள்ளதா? அப்படியானால் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சரும கருமை நீங்குவதோடு, சுருக்கங்களும் குறையும்.
8. கருமை நீங்க...
* வெயிலில் சுற்றி உங்கள் முகம் கருமையாக காட்சியளிக்கிறதா? அப்படியானால் ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, ஆரஞ்சு ஜூஸை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
9. முகப்பரு தழும்புகள் நீங்க..
* முகத்தில் கருமையான தழும்புகள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் சிறிது நன்கு கனிந்த பப்பாளியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
10. பொலிவிழந்த முகத்திற்கு...
* உங்கள் முகம் பொலிவிழந்து உள்ளதா? அப்படியானால் முகப்பொலிவை அதிகரிக்க ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
