Latest Updates
-
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி!
கல் உப்பை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா.. சரும பிரச்சனைகளே வராதாம்.. ட்ரை பண்ணி பாருங்க...
Skin Care Tips In Tamil: பொதுவாக கடல் உப்பை நாம் உணவில் சேர்த்து வருவதுண்டு. ஏனெனில் கடல் உப்பில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் கடல் உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நம்முடைய சரும ஆரோக்கியத்திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
இந்த கல் உப்பில் சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், அயோடின் மற்றும் ஏராளமான தாதுக்கள் காணப்படுகிறது. இது பல உடல் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். இந்த கடல் உப்பை தண்ணீரில் போட்டு அதைக் கொண்டு முகம் கழுவி வந்தால் ஏராளமான நன்மைகளை நீங்கள் பெறலாம்.

இது உங்கள் சருமம், கூந்தல் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முகத்தில் இருக்கும் தழும்புகள், பருக்கள் இவற்றை போக்க உதவுகிறது. சரி வாங்க இந்த கடல் உப்பை பயன்படுத்தி எப்படி நம் சரும அழகை மேம்படுத்தலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
கடல் உப்பை பயன்படுத்தும் முறை
1/2 கப் டிஸ்டில்டு தண்ணீரில் 1/2 டேபிள் ஸ்பூன் கடல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் 1 டேபிள் ஸ்பூன் விட்ச் ஹேசல் மற்றும் 4 துளிகள் லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை குளிர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். இப்பொழுது முகத்தை நன்றாக சுத்தம் செய்து இந்த கலவையை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். பிறகு உலர விட்டு முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளை மறையச் செய்கிறது. இது சருமத்திற்கு நல்ல டோனராக செயல்படுகிறது.
கடல் உப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
முகப்பருக்களை குறைக்கிறது
கடல் உப்பு முகப்பருவிற்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்குவதன் மூலம் முகப்பருக்களை குறைக்கிறது. சருமத்தில் உள்ள பெரிய துளைகளை சுருக்கி முகப்பருக்களை நீக்குகிறது. உங்களுக்கு எண்ணெய் சருமம் அல்லது முகப்பருக்கள் அடங்கிய சருமமாக இருந்தால் கடல் உப்பை இயற்கை டோனராக பயன்படுத்தி வரலாம்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது
கடல் உப்பை உங்கள் சருமத்திற்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தி வரலாம். கடல் உப்புடன் தேன், சரும பராமரிப்பு எண்ணெய், கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து கலந்து பயன்படுத்தி வரலாம். குளிக்கும் போது இது ஸ்க்ரப்பாக பயன்படுத்த வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதை பயன்படுத்திய பிறகு உங்கள் சருமம் மென்மையாக இருப்பதை நீங்கள் காணலாம்.
சொரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா
அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி இருப்பவர்கள் கடல் உப்பை பயன்படுத்தி வரலாம். கடல் உப்பு சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை நீக்குகிறது. 1 கப் கடல் உப்பை 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் கலக்க வேண்டும்.
இதில் 10 துளிகள் லாவண்டர் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயை டப்பில் உள்ள வெதுவெதுப்பான நீரில் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரில் 15 நிமிடங்கள் உங்கள் உடலை ஊற வைத்து பிறகு வாரத்திற்கு 2 முறை குளிக்க வேண்டும்.
சருமம் வயதாகுவதை தடுக்கிறது
கடல் உப்பு ஸ்க்ரப் உங்கள் சருமம் உறுதியாகவும் இறுக்கமாகவும் இருக்க உதவுகிறது. இது தொய்வுற்ற சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. கடல் உப்பில் அதிகளவு மக்னீசியம் காணப்படுகிறது. இது புதிய செல்கள் தோன்ற உதவுகிறது. சருமத்தை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
1 டேபிள் ஸ்பூன் கடல் உப்புடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் ஆன்டி ஏஜிங் அத்தியாவசிய எண்ணெய், ஜெரனியம் அல்லது ரோஸ் எண்ணெய் 2 துளிகள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை முகத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். கண்களை தவிர்த்து நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவுங்கள். உங்களுக்கு நல்ல மிருதுவான சருமம் கிடைக்கும்.
செல்லுலைட்டை நீக்குகிறது
தடைகள் மற்றும் பிட்டம் போன்ற பகுதிகளில் நச்சுக்கள் மற்றும் பழைய கொழுப்பு செல்கள் படிவதால் செல்லுலைட் உருவாகிறது. இந்த செல்லுலைட்டை குறைக்க கடல் உப்பு உதவுகிறது.
ஒரு பெளலில் 2 டேபிள் ஸ்பூன் கடல் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் க்ரீமி தேங்காய் எண்ணெய், 7 சொட்டுகள் திராட்சை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப்பை செல்லுலைட் பகுதியில் வைத்து 4 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்ய வேண்டும். பிறகு சோப்பு போட்டு கழுவி விடுங்கள்.
பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க உதவுகிறது
சில பேருக்கு பாதங்களில் நீர் தேக்கத்தால் கால்கள் வீங்கி இருக்கும். அவர்களுக்கு பாதங்களில் உள்ள வீக்கத்தை போக்க கடல் உப்பு உதவுகிறது. கடல் உப்பு தண்ணீரில் கால்களை ஊற வைக்கும் போது பாதங்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. பாதங்களில் உள்ள உலர்ந்த செதில்கள், பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க உதவுகிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் கடல் உப்பை போட்டு காலை ஊற வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications