Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
மோதிரம் அணியும் இடம் பச்சையாக மாறுவது ஏன்? அதனால் ஆபத்தா? எப்படி சரிசெயய்லாம்?
மோதிரம் போன்ற உலோகங்கள் அணிகின்ற பொழுது உண்டாகும் பச்சை நிறத்தை எப்படி சரிசெய்வது என்று பார்ப்போம்.
பொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் ஜாலியாகவும் இருக்கும். ஆனால் மோதிரங்கள் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பு போன்று உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள்.
அது ஜாலியான விஷயமெல்லாம் இல்லை. அது சாதாரண விஷயமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி அதில் அவ்வளவு சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதோ பார்க்கலாம் வாங்க.

மோதிரங்கள் அணியுமிடம்
சில சமயங்களில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற சில உலோகங்களால் ஆன அணிகலன்களை அணிகின்ற பொழுது, அதிலுள்ள ஆக்சிடைஸ் நம்முடைய சருமத்தில் கறைகளையும் தீம்புகளையும் ஏற்படுத்தி விடும். அப்படி தழும்புகள் உண்டாகாமல் இருப்பதற்கும் பச்சை நிற கறைகள் ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி சரிசெய்யலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

கிளியர் நெயில் பாலிஷ்
மோதிரங்களில் உள்ள உலோகத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிடைஸ் தான் இந்த பச்சைநிற மாற்றத்துக்குக் காரணம். அதனால் கண்ணாடி போன்ற கிளயர் நெயில் பாலிஷை மோதிரத்தின் உட்பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் உலர விட்டு, பின் கைகளில அணிந்து கொள்ளுங்கள். இது பச்சை நிற கறை விரல்களில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதேசமயம் மோதிரம் சற்று கூடுதல் பளபளப்புடன் இருக்கும்.

ஸ்கின் கார்டு
கடைகளில் சருமங்களில் தழும்புகள் விழாமல் பாதுகாக்க ஸ்கின் கார்டு என்றே விற்கப்படுகிறது. அதை வாங்கி மோதிரங்கள் மற்றும் கொழுசு, அரைஞாண் கயிறு அணியும் இடங்களில் தடவிக் கொண்டு, அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம்.
இதில் உங்களுககு ஒரு கேள்வி வரலாம். இந்த ஸ்கின் கார்டு தினமும் அப்ளை செய்ய வேண்டுமா என்று நீங்கள் கேட்டலாம். அதற்கு அவசியம் இல்லை. ஒருமறை அப்ளை செய்தால், அது நம்முடைய சருமத்தை இரண்டு மாதங்கள் வரை சருமத்தில் பச்சை நிறம் தோன்றாமல் இருக்கும்.

கைகழுவும் முன்
கை கழுவுவதற்கு முன்பு, கையில் காப்பு அல்லது மோதிரத்தை கழற்றி விட வேண்டும். ஈரமான பின் கழற்றக் கூடாது. நீச்சல் அடிக்கின்ற பொழுது, கைகளைக் கழுவும்போது மோதிரங்களைக் கழற்றிவிடுவது நல்லது. ஏனெனில் தண்ணீரின் மூலம் சருமத்தில் ஏற்படுகின்ற ஆக்சிடேசனால் மோதிரங்கள் அணிந்திருக்கும் இடத்தில் பச்சை நிறத்தில் மாறிவிடுகிறது.

சோப்புகள்
கைகளில் லோஷன்கள் அப்ளை செய்யும் போது, சோப் மற்றும் பர்ஃபியூம்களைக் கையாளும் போது மோதிரங்களை அணிந்திருக்கக் கூடாது. அதை கழற்றி வைத்துவிடுவது நல்லது.

ஐ மேக்கப் ரிமூவர்
ஒருவேளை மேற்சொன்ன எதையும் நீங்கள் கடைபிடிக்காததால் உங்களுடைய சருமத்தில் மோதிரம் அல்லது காப்பு அணிந்த இடத்தில் பச்சை நிறமாக ஆகிவிட்டது. அதை எப்படி சரிசெய்வது? அதற்கும் ஈஸியான வழி இருக்கு.
ஆம். ஐ மேக்கப் ரிமூவ் செய்யும் லிக்வியூடு அல்லது லோஷன்களை காட்டனில் நனைத்து பச்சை நிற கறை உள்ள இடத்தில் மென்மையாகத் தேய்த்து எடுங்கள். அந்த தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

ஆல்கஹால்
காட்டனில் ஆல்கஹாலை நனைத்து, அதை பாதிக்கப்பட்ட சருமத்தில் வைத்து மென்மையாகத் தேய்த்து எடுத்தாலே போதும். மற்ற மருந்துகளைப் போல இதை பயன்படுத்தியவுடன் கை கழுவ வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது.

நெயில் பாலிஷ் ரிமூவர்
நெயில் பாலிஷ் ரிமூவர் கூட இந்த பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். அதிலும் மிக அதிக அளவில் இந்த பச்சை நிறம் சருமத்தில் தோன்றினால் இந்த நெயில் பாலிஷ் ரிமூவர் தான் பெஸ்ட் தீர்வு். ஒரு காட்டனில் அசிட்டோன் சேர்க்கப்படாத நெயில் பாலிஷ் ரிமூவரை நனைத்து தேய்த்து எடுங்கள்.
முக்கியமாக இதை வாரத்தில் ஒருமுறைக்கு மேல் அப்ளை செய்யக் கூடாது.

எந்த உலோகம்
சிலர் செம்பு அணிந்தால் நல்லது என்று சொல்வார்கள். அப்படியானால் கொஞ்சம் தளர்வான காப்பாக கைகளில் அணிந்து கொள்ளுங்கள். மோதிரமாக அணிய வேண்டாம். காப்பர், ஸ்டெர்லிங்க் சில்வர், அலாய்டு மெட்டல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
அதற்குப் பதிலாக, ஸெ்டெய்ன்லஸ் ஸ்டீல், ஹேடியம், யெல்லோ கோல்டு, ஒயிட் கோல்டு ஆகியவற்றால் செய்த நகைகளை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications












