Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாய் நாற்றம் உங்களை பேசவிடமால் தடுக்கிறதா? அப்ப இத படிங்க
வாய்துர்நாற்றத்தை ஆயுர்வேத முறையில் நீக்குவதற்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன
வாய் துர்நாற்றத்தினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறீர்களா? நீங்கள் பேச வாயை திறந்தாலே அருகில் இருப்பவர்கள் மூக்கை மூடிக்கொள்கிறார்களா? இனி கவலை வேண்டாம் வாய் துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்பது பற்றி காண்போம்.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையை ஒரு கப் அளவு நீரில் இட்டு காய்ச்சி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நீரை வாய்கொப்பளிக்க பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

பார்ஸ்லி இலைகள்
பார்ஸ்லி இலைகள் வாய் துர்நாற்றத்திற்கு நல்ல பலன்களை தரும். இவற்றை வாயில் இட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.

ஏலக்காய் விதைகள்
ஏலக்காய் விதைகளை மெல்லுவதன் மூலம் உங்களுக்கு இனிமையான சுவாசம் கிடைப்பது உறுதி.

கிராம்பு
கிராம்பு வாய் மற்றும் பல் பிரச்சனைகளை ஏற்றது. கிரம்பை மென்று வாயில் வெற்றிலையை போல அடக்கிக்கொண்டால் வாய் துர்நாற்றம் போகும். சில நறுமண பொருட்களையும் மெல்லலாம்.

எலுமிச்சை
நீரில் எலுமிச்சை சாறும் உப்பு சேர்த்து இந்த கலவையால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் போகும்.

கொத்தமல்லி
கொத்தமல்லி ஒரு சிறந்த நறுமணப்பொருள் ஆகும். இதை வாயில் போட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.

மங்குஸ்தான் பழம்
மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று சாப்பிடுவதால் வாய்துர்நாற்றம் நீங்கும். ஆனால் சாப்பிட்ட உடன் வாய்கொப்பளித்து விடுங்கள். இல்லையென்றால் உணவு துணுக்குகள் பற்களில் சிக்கிக்கொள்ளும்.

தினமும் இருமுறை அவசியம்
பற்களை சுத்தம் செய்யும் போது நாக்கையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள். தினமும் இரண்டு முறை பல்துலக்குங்கள்.

இரவு வேலை
இரவு வேலை செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் சாப்பிடமால் இருப்பவர்களுக்கும் வாய்துர்நாற்றம் உண்டாகும். அவர்கள் இந்த முறைகளின் மூலம் சிறந்த பலனை அடையலாம்.



Click it and Unblock the Notifications