Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
அழகான உடலுக்கு சங்கு மாதிரி கழுத்தை பெற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
ஒரு பெண்ணுக்கு முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது.. அவளின் கை, கால்களுடன் அழகான உடலும் சங்கு போன்ற கழுத்தும்தான் அழகாக இருக்க வேண்டும்.. அது அந்த அழகை இன்னும் மெருகேற்றுகின்றன.. சிலருக்கு முதுகுப் பகுதியில் முகப்பரு வடுக்கள் ஏற்படும். மற்றவர்கள் வறட்சியின் காரணமாக தோல் உதிர்வதை எதிர்க்கொள்கிறார்கள்..
அப்படி பருக்களும் வறண்ட சருமமும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சங்கு போன்ற மென்மையான கழுத்தும், அழகான முதுகும் இருக்க வேண்டுமென்றால் இந்த முன்னெச்சரிக்கைகள் அவசியம். அது என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம் வாங்க..

1. கழுத்து தோல் உணர்திறன் மிக்கது.. எனவே அதனை தேய்த்தல் மூலம் சுத்தம் செய்யக்கூடாது. குளிக்கும்போது கூந்தல் மற்றும் கழுத்தில் உள்ள அழுக்கை எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
2. பப்பாளிக் கூழை ஒரு பேக் போல பத்து நிமிடம் தடவி, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், பளபளப்பான நிறம் மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.
3. கழுத்து கருப்பாக இருப்பவர்கள் பப்பாளி கூழ் பேக் போட்டால் கழுத்து வெள்ளையாக மட்டுமின்றி மிருதுவாகவும் இருக்கும்.
4. சூரிய ஒளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கழுத்தை வெந்நீரில் கழுவவும். அதன் பிறகு, மென்மையான துண்டுடன் துடைக்கவும்.
5. கழுத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு ஸ்பூன் பால், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கழுத்தில் தடவவும்.
6. வெந்தய இலை மற்றும் உளுந்து மாவின் சாறு கழுத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கழுத்து அழகாக பளபளக்கும்.
7. ஒரு டவலை வெந்நீரில் நனைத்து, இறுக்கமாக பிழிந்து, கழுத்தில் சுற்றி, பத்து நிமிடம் வைத்திருக்கவும். இது சருமத்தை சூடாக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
8. கற்றாழை கூழ், மஞ்சள் மற்றும் உளுந்து மாவு கலந்து கழுத்தில் இருந்து தோள்பட்டைக்கு கீழே ஒரு பேக் போடவும். பின்னர் வெந்நீரில் ஊறவைத்த பருத்தியைக் கொண்டு பேக்கை முழுவதுமாக அகற்றவும்.
9. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை, கழுத்தை தூக்கி, வளைத்து, நான்கு நிமிடங்கள் சுழற்ற வேண்டும். இதன் காரணமாக கழுத்து தசைகள் நன்றாக வேலை செய்கின்றன.
10. கில்ட் நகைகளை அணிவதால் கரும்புள்ளிகள் ஏற்படும். அவை அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே கோடையில் தங்க நகைகளை அணியாமல் இருப்பது நல்லது. ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கழுத்தை மசாஜ் செய்வதன் மூலம் முழுப் பகுதியும் மென்மையாக மாற்றும். இரவில் படுக்கும் முன் ஆலிவ் எண்ணெயைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.



Click it and Unblock the Notifications
